ஞாயிறு, 11 நவம்பர், 2018

இலிங்கமணைத்த நந்தி

அழகே உருவான நந்தி. கால்களை மடக்கி அமர்ந்துள்ளது.


இதன் முன்னங்கால்களுக்கு இடையில், செதுக்கப்பட்டுள்ளது, சிறிய அளவிலான இலிங்கம்.


இந்த இலிங்கம், நந்திக்குத் தனித்தன்மை தருவதுடன் இதன் பெருமையையும் பன்மடங்காக உயர்த்தி விடுகிறது.


“இதுபோல் இலிங்கமணைத்த சோழர்கால நந்தியை இதுநாள் வரையிலும் யாண்டும் கண்டதில்லை” என வியக்கின்றனர், ஆய்வாளர்கள் மு.நளினி, இரா.கலைக்கோவன். (நூல் மகேந்திரர் குடைவரைகள்).


இது, அமைந்துள்ள இடம் செஞ்சி அருகே உள்ள மேலச்சேரிக் குடைவரையின், வெளிப்புறம்.


இந்த இலிங்கமணைத்த நந்தியை நானும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.


வாய்ப்பிருப்பவர்கள், பல்லவர்களின் மேலச்சேரி குடைவரைக் கோயிலையும், சோழர் கால நந்தியையும் கண்டு வருக...