மகிழ்ச்சியும் மனநிறைவும்...
மக்களைச் சந்தித்தோம். அதில் தான் இந்த மகிழ்ச்சியும் மனநிறைவும்.
நேற்று (02.02.2019) சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கியத் தெருமுனைக் கூட்டங்கள், இரவு ஒன்பது மணிக்கு காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
பேராசிரியர் த.பழமலய், தலைமை ஆசிரியர் த.பாலு, எழுத்தாளர் இரா.இராமமூர்த்தி, பேராசிரியர் த.ரமேஷ், தோழர் வ.பன்னீர் செல்வன், நண்பர்கள் த.நாராயணன் ( D Narayanan) முரளி, ரஃபி, முபாரக் ஆகியோர் சிறப்பாகப் பேசினர்.
நண்பர் விழுப்புரம் கோ.பாபு முன்னிலையில் நண்பர்கள் அனைவரும் சுற்றிச் சுழன்று மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு தமிழிளைஞர் கூட்டமைப்பு, யாதும் ஊரே யாவரும் கேளிர், நம்ம விழுப்புரம், கரிகால சோழன் பசுமை மீட்புப் படை, யுவதியா நினைவு நூலகம் நண்பர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்துக் களப்பணி ஆற்றினர்.
தோழர்களுக்கு நம் நன்றிகள்...
அருங்காட்சியகம் என்றால் என்ன?
விழுப்புரம் மாவட்டத்திற்கு அதன் அவசியம் என்ன?
என்பதுபற்றி எல்லாம் மக்களிடம் விரிவாகப் பேசப்பட்டது.
அதுதான் மனநிறைவு, மகிழ்ச்சி என்றேன்.
நம் தெருமுனைக் கூட்டங்களுக்கு கேட்ட மாத்திரத்தில் அனுமதி வழங்கிய விழுப்புரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்...
பத்திரிகை ஊடக நண்பர்களும் களத்தில் நம்மோடு கை கோர்த்துள்ளனர். அவர்களுக்கும் நம் நன்றிகள்....
நம் தொடர் முயற்சிகள் நிச்சயம் பலனைத் தரும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது....
நேற்றைய தெருமுனைக் கூட்டங்கள் தொடர்பானச் செய்தி இன்றைய (03.02.2019) தினமணி, தினமலர் நாளிதழ்களில் வந்துள்ளது. மகிழ்ச்சி...