திங்கள், 17 ஜூன், 2019

வரலாற்றில் புறக்கணிக்கப்படும் விழுப்புரம் மாவட்டம்

“கண்டிக்கிறோம்”

அருங்காட்சியகம் கூட்டமைப்பின் சார்பில் பணிகளை மேற்கொண்டு எட்டு மாதங்கள் ஆகின்றன.

இதுவரை ஒரு முறை கூட இந்த வார்த்தையை நாம் உபயோகப்படுத்தியது கிடையாது.

மிகவும் பொறுமையாகத்தான் அடிகளை எடுத்து வைத்து வந்திருக்கிறோம்.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வோரைச் சந்திக்கும் போது நமக்கு ஏற்பட்ட மாறுபட்ட, கசப்பான அனுபவங்களின் போதுகூட மிகுந்தப் பொறுமையைத் தான் கடைபிடித்தோம்.

பொது காரியத்துக்கு என்று வந்துவிட்டோம்; எல்லாவற்றையும் சந்திப்போம் என்று அமைதியாக இருந்தோம்.

இதற்கு ஏற்றாற்போல “விழுப்புரத்தில் நிச்சயம் அருங்காட்சியகம் வந்துவிடும்” என பலதரப்பில் இருந்தும் நமக்கு நம்பிக்கையூட்டப்பட்டன.

ஆனால் பாருங்கள். கடந்த வியாழன் அன்று கீழடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் அமையக்கூடிய மாவட்ட அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டு உள்ளார். இதில் விழுப்புரம் மாவட்டம் இல்லை.

இன்று நேற்றல்ல பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் ஒரு பிரச்சினை. தமிழக அரசாங்கத்தால் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

நாம் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தும் கூட விழுப்புரம் மாவட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றால், இனியும் நாம் “ கண்டிக்காமல்' எப்படி இருப்பது?

வரலாற்றில் விழுப்புரம் மாவட்டம் தொடர்நதுப் புறக்கணிக்கப்படுகிறது.

இனி, தமிழக அரசைக் கண்டித்துக் களத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை..!



( இணைப்பில்: இன்றைய 16.06.2019 தமிழ் இந்து நாளிதழில் வெளியான நமது அறிக்கை.

நன்றி: செய்தியாளர் திரு.எஸ்.நீலவண்ணன்)