இவரை அண்ணாந்து தான் பார்க்க முடிகிறது..!
அவ்வளவு பிரம்மாண்டம்: இன்னமும் கூட பல அடிகள் கீழே, மண்ணில் புதைந்து இருக்கிறாராம்!
திருவக்கரைப் பகுதியில் இருந்து பணிகள் முற்றுபெறுவதற்கு முன்னமேயே, தஞ்சை பெரிய கோயிலுக்குத் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் இந்த நந்தீசர்.
ஆனால், சிறிது தூரத்திலேயே சங்கராபரணி ஆற்றைக் கடந்தும் வண்டியில் இருந்து கீழே விழ, பின்ன மானவர் அதே இடத்தில் கைவிடப்பட்டார்.
தஞ்சை பெருவுடையார் கோயில் மூலவரான பெரிய இலிங்கத்திற்கானக் கல், விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது வரலாற்று உண்மை.
ஆனால் அங்கிருக்க வேண்டிய நந்தீசர், இங்கேயே தங்கி விட்டார்.
இதற்குப் பிறகு இராஜராஜன் சிறிய நந்தியை வைத்து வழிபட்டதாகவும் தற்போதுள்ள பெரிய நந்தி, நாயக்கர் காலத்தில் வைக்கப்பட்டதாகவும் ஆய்வாளர் பேராசிரியர் சு.இராஜவேலு அவர்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, தஞ்சை பெரிய கோயிலில் இருந்து இங்கு வந்த சிவாசாரியார்கள் கைவிடப்பட்ட இந்த நந்தீசருக்கு வழிபாடு நடத்திச் சென்று இருக்கின்றனர்.
விழுப்புரத்தின் அருகாமையில் இருந்தும் இன்றைய பயணத்தின் போது தான் நாங்களே இவரைச் சந்தித்தோம்.
நீங்களும் இவரை சந்திக்க வேண்டுமா..?
சாராயக் கடை அருகில்,
சன்னியாசிக்குப்பம்,
வழி: திருபுவனை, புதுச்சேரி மாநிலம்…
எனும் முகவரியில் அணுகவும்..!