கவிஞர் திருலோக சீதாராம்...
பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டமான்துறையில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917இல் மகனாகப் பிறந்தவர்.
பாரதியின் மீது தீவிரப் பற்றுடையவர். செல்லும் இடங்களில் எல்லாம் பாரதிப் பாடல்களைப் பாடியவர். பாரதியின் குடும்பத்தோடு நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.
பாரதியின் மனைவி செல்லம்மாள் இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தவர். திருலோக சீதாராம் மடியில்தான் செல்லம்மாள் பாரதியின் உயிர் பிரிந்தது.
சிறுவயதிலேயே எழுத்தாற்றல் கொண்டிருந்த திருலோக சீதாராம், இந்திய வாலிபன், ஆற்காடு தூதன், கிராம ஊழியன், சிவாஜி, பால பாரதம் ஆகிய பத்திரிகைகளை நடத்தி இருக்கிறார்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு, இலக்கியப் படகு உள்ளிட்ட நூல்களை எழுதி இருக்கிறார்.
பாரதி குடும்பத்தினரோடு நெருங்கியத் தொடர்பில் இருந்த திருலோக சீதாராம், கவிஞர் பாரதிதாசனோடும் நட்புக் கொண்டு இருந்தார். திருச்சியில் பாவேந்தர் குறித்து இவர் ஆற்றிய உரையைக் கேட்ட அண்ணா, “அக்ரஹாரத்து அதியசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்” எனப் பாராட்டி இருக்கிறார்.
திருலோக சீதாராமுக்கும் விழுப்புரத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவரது எழுத்துப் பணி, ஏறக்குறைய இந்த மண்ணில்தான் தொடங்கியிருக்க வேண்டும். அருகிலுள்ள பரிக்கலில், இராம சடகோபன் என்பவர் நடத்திவந்த “தியாகி” எனும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.
1938இல், விழுப்புரத்தில் “பால பாரதம்” எனும் இதழை நடத்தி இருக்கிறார். இதே காலக்கட்டத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை இவர் முதன் முதன் முதலில் விழுப்புரத்தில் சந்தித்து இருக்கிறார்.
1952இல் விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையில் நடந்த விழாவில், பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதியுடன், திருலோக சீதாராமும் பங்கேற்றுச் சிறப்பித்து இருக்கிறார்.
விழுப்புரத்துக்கும் இவருக்குமான மேலதிகத் தொடர்புகள் விரிவாக ஆய்வும் பதிவும் செய்யப்பட வேண்டும்.
இவர் தனது 56ஆம் வயதில் 1973இல் காலமானார்.
திருலோக சீதாராமன் குறித்து கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்ரமணியன் ”திருலோகம் என்றொரு கவி ஆளுமை” எனும் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர், பத்திகையாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் திறன்கொண்ட திருலோக சீதாராமன் அவர்களின் பிறந்த நாள் இன்று (ஏப் 1)!