சிங்கவரம்… விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறிய கிராமம். இன்னைக்கு இது சின்ன கிராமம். ஆனால் ஒரு காலத்தில் ஒரு நாட்டின் தலைநகராக, சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்துச்சு.
முதலாம் மகேந்திரவர்மப் பல்லவனோட தந்தை சிம்மவிஷ்ணு காலத்துல அவர் பெயரால இந்த நகரம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் னு சொல்றாங்க.
அப்புறம் அன்றைய செஞ்சி, சிவசெஞ்சி ன்னும் விஷ்ணு செஞ்சின்னும் இரண்டு பிரிவுகளா இருந்துச்சு.
இதுல விஷ்ணு செஞ்சிங்கறது நம்ம சிங்கவரம் தான்.
18ஆம் நூற்றாண்டுல புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை ஆவணங்கள்ல பழைய செஞ்சி ன்னு ஒரு பகுதி குறிப்பிடப்படுது. அது சிங்கவரம் மேலச்சேரிய சேர்ந்த பகுதிகளா இருக்கணும்.
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கவரம் கிராமத்துல முக்கியமான ஒரு வரலாற்றுச்சின்னம் இருக்கு. அதுதான் குன்றின் மீது இருக்கும் அருள்மிகு அரங்கநாதர் கோயில். பல்லவர் கால குடைவரைக் கோயில்.
இங்கு பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதர் சிற்பம் பிரம்மாண்டமானது.
மேலும் இங்குள்ள கொற்றவைச் சிற்பம் காலத்தால் முந்தியது.
கடந்த வாரத்தில் விழுப்புரம் மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம்..இது சிங்கவரத்தையும் விட்டு வைக்கல.
அரங்கநாதர் கோயில் இருக்கிற குன்றின் பல இடங்களில் நிலச்சரிவு..
இப்போ அதை சரி செய்யறதுக்கான தற்காலிக வேலைகள் நடந்துட்டு இருக்கு.
இந்த நிலையில் தான் இந்தப் பாதையில் இருந்ததாச் சொல்லி பாறை ஒண்ணு வெடி வைச்சு தகர்க்கப்பட்டு இருக்கு.
இது ரொம்பவும் அதிர்ச்சியான விஷயம் தான். கோயிலுக்கு அருகாமையிலேயே இது நடந்திருக்கு. நடந்திருக்கக் கூடாத நிகழ்வு.
இதனால கோயிலுக்கு பாதிப்பு எதுவும் இல்லை ன்னு அறநிலையத்துறை அதிகாரிகள் சொல்றாங்க.
ஆனாலும் குடைவரைக்குப் பக்கத்துல இந்த மாதிரி செய்யக் கூடாது இல்லீங்களா.
இப்ப இந்த விஷயம் சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் போய் இருக்கு. விசாரணையும் நடந்துட்டு இருக்கு.
காலத்தாலும் வரலாற்றாலும் பாதுக்கப்பட வேண்டிய ஒரு இடம் சிங்கவரம் அரங்கநாதர் கோயில்.
இந்தக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருககு. ஆனா தொல்லியல் துறையின் பார்வை இன்னும் படலங்கறது தான் நமக்கு ஆச்சரியமா இருக்கு.
இதுபற்றி எல்லாம் விரிவாகவே பேசுகிறது..இணைப்பில் உள்ள பதிவு...
23.11.2021 அன்று இப்பயணத்தில் உதவிய நண்பர் திருவாமாத்தூர் கண.சரவணகுமாருக்கு நன்றி!
https://youtu.be/yMdvrRmdJog