கீழ்அருங்குணம்...
திண்டிவனம் – மரக்காணம் சாலையில் அமைந்துள்ள கிராமம்.
அருகிலுள்ள குரூர் கிராமத்தைச் சேர்ந்த சிவனடியார் விக்னேஷ்வரன் அழைப்பின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்காணும் கிராமத்திற்குச் சென்றிருந்தேன்.
உடன் வந்த உள்ளூர் நண்பர்கள் அங்கிருக்கும் ஏரிக்கு அழைத்துச் சென்றனர். மதகு வழியாக இறங்கி நடந்தோம்.
இதோ, அழகிய கொற்றவை சிற்பம். மண்ணில் கிடந்த நிலையில் காட்சியளிக்கிறார். வழக்கமான 8 கரங்கள் இல்லாது 4 கரங்களுடன்! பின்னணியில் அவளது வாகனமான அழகிய மான்!
கலைநயம் மிக்க பல்லவர் கால சிற்பம்.
ஏரிக்குள், ஏன் இப்படி?
உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள்: “இது என்ன சாமி ன்னு ல்லாம் எங்களுக்குத் தெரியாது. இதைத் தூக்கி நிறுத்தினால் ஊருக்குக் கெட்டது நடக்கும் ங்கற பயம் மட்டும் எல்லார் மனசிலேயும் இருக்கு.”
பய பக்தி இருக்கலாம். ஆனால் இங்கு பயம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது! இந்த பயத்தினால் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கலை, வழிபாட்டு, வரலாற்றுச் சின்னம், மண்ணில் படுத்துக் கிடக்கிறதே!
"இப்படி இருக்கக் கூடாது. இவரைத் தூக்கி நிறுத்துங்கள். ஊருக்குள் கொண்டு சென்று வழிபாடு செய்யுங்கள்."
கீழ்அருங்குணம் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். செய்வதாகவும் சொன்னார்கள். செய்வார்கள் என்றும் நம்புவோம்!
https://youtube.com/shorts/-TYRmCogPi4?si=is-hDIY0Yn4o8_r3
https://www.facebook.com/share/v/18MMr5FTyg/
இணைப்பில்: இன்றைய (24.10.26) இந்து தமிழ் திசை நாளிதழில் பிரசுரமாகி இருக்கும் கீழ் அருங்குணம் கொற்றவை சிற்பம் குறித்தச் செய்தி!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக