“அரிதுஅரிது நூல்களைப் படிப்பதறிது
அதனினும் அறிது படித்த நூல்கள் குறித்து எழுதுவது.”
இப்படித்தான்
சொல்லத் தோணுது!
பின்னே
பாருங்களேன்,
என்னுடையப்
“பழையு பேப்பர்” நூல் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு
மேலாகிவிட்டது.
வெளியீட்டு விழாவில், முன்னமேயே படிப்பதற்கு வாய்ப்புக்
கிடைத்தவர்கள், நூல் குறித்து விலாவாரியாகப் பேசிவிட்டார்கள். மகிழ்ச்சி!
விழா முடிந்த அடுத்த நாளே தோழர் கார்க்கி உதயன் தொலைபேசியில் தொடர்பு
கொண்டு நூல் குறித்துப் பேசினார். கிழக்குப் பதிப்பகம் திரு.மருதன், “பழைய பேப்பர்” குறித்து முகநூலில் சிறு அறிமுகம் செய்து
வைத்தார். நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன், நூல் வெளியீட்டு விழா குறித்த
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்புறம், விழுப்புரம்தான்!
ஒருசிலருக்கு நானே போன் போட்டுக் கேட்டேன் “வாசிச்சீங்களா?” நூலின் சில பகுதிகளைச் சுட்டிக்காட்டினார்கள்.
உண்மையிலேயே வாசித்துத்தான் இருக்கிறார்கள்.

ஒருவேளை எழுதுவதற்கு விருப்பமில்லையோ?
ச்சே ச்சே அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. விருப்பமில்லாமலா
விழாவுக்கு வந்தார்கள்? புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கினார்கள்? நண்பர்களின்
மீது எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.
புத்தகத்தைப் படித்தவர்களுக்கு, அதுபற்றி எழுத நேரமில்லை.
அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்ன நான் சொல்வது சரிதானே?
அன்புடன்,
கோ.செங்குட்டுவன்.
99 44 622 046.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக