வெள்ளி, 9 செப்டம்பர், 2016

இந்த வார குங்குமம் இதழில்...



“தேர்ந்த பத்திரிகையாளரின் பங்கு ஒரு போர் வீரன் போன்றது. சூழலுக்குத் தக்கவாறு பணியாற்றுவதும், நல்ல வண்ணம் அந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் சாதாரண வேலையில்லை. அதிலும் வெளியூரில் இருந்து செய்தி சேகரிக்கும் நிருபரின் பணி சுவாரஸ்யங்கள் நிறைந்தது. திடீர் திருப்பங்கள் கொண்டது.
இவ்வளவு செய்திகள் உருவான அத்தனை பின்னணிகளையும் துறுதுறு நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் செங்குட்டுவன்.
சதா நுண்ணுணர்வுடன் வேலை செய்ய வேண்டிய அவசியத்தைப் புரிய வைக்கிறார். அவரின் அனுபவங்கள், செய்தியாளர்களுக்கு கற்றுத்தரும் பாடங்களாகிவிடுகின்றன. ஒரே ஓட்டத்தில் படித்து முடித்துவிடலாம். செய்தி சேகரிப்பின் அத்தனை சூட்சமங்களும் புரிந்துவிடுகிறது. இதழியல் மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்குமான புத்தகம்.
பெயர்தான் “பழைய பேப்பர்”.  விஷயங்கள் இன்றைக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான்.
“பழைய பேப்பர்குறித்தான புத்தக அறிமுகம், குங்குமம் வார இதழில் மேற்கண்டவாறு  பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்கூறு நல்லுலகிற்கு என்னுடைய நூலினை நல்லவண்ணம் அறிமுகப்படுத்தி வைத்த குங்குமம் முதன்மை ஆசிரியர் திரு.தி.முருகன் அவர்களுக்கும், குங்குமம் நிர்வாகத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இத்தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக