இப்போதெல்லாம் திராவிடத்தை எதிர்ப்பது என்பதே ‘அக்கிரகாரத்தின் குரல்’ என்பதாகப் பார்க்கப்படுகிறது.
அடப்பாவமே, ‘திராவிடம்’ என்பதே அக்கிரகாரத்தின் குரல்தானே! இது
தெரியாதா உங்களுக்கு?
மனுவும், குமாரிலபட்டரும், ஆதிசங்கரரும் யாராம்?
இவர்களிடமிருந்து தானே ‘திராவிட’த்தைக் கடன் பெற்றதாகப் பிஷப் கால்டுவெல்
சொல்லியிருக்கிறார்.
இதைத் தானே பெரியாரும் அண்ணாவும் அரசியல் ரீதியிலான அழுத்தத்திற்குப்
பயன்படுத்தினார்கள்! இதை வைத்துத் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது.
இல்லையில்லை, ஏன் நடேசனாரை விட்டுவிட்டீர்கள்? என்று கேட்கலாம். சரி,
அவரையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
எப்படியிருந்தாலும், மூலம் 'அக்கிரகாரம்' என்பதுதான் உண்மையல்லவா!
‘திராவிடம்’ எனும் வார்த்தை, எட்டுத்தொகையிலும்
பத்துப்பாட்டிலும் இருப்பதுபோல் பொங்குவது ஏனோ?
மனுவின் ‘ஸ்மிருதி’யை எரிக்க வேண்டும் என்று வானத்துக்கும்
பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவர்கள்,
அதையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர்கள்,
அவன் பயன்படுத்திய வார்த்தையையே, தங்களின் தலைப்பெழுத்தாகப் போட்டுக்
கொண்டிருப்பது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும்கூட!
என்ன நீங்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்களா? -நண்பர்கள்
கேட்பது எனக்குத் தெரிகிறது.
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இதுபற்றித்தான் ஆய்வு. அதுதான்
அண்மைக் காலமாக முகநூல் பக்கமாகவும் என்னைப் பார்க்க முடிவதில்லை.
ஏறக்குறையப் பணிகள் முடிந்தாயிற்று. விரைவில் நூலாக்கம் தொடங்கும்!
இணைப்பில்: என் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களில் சில....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக