திங்கள், 25 செப்டம்பர், 2017

விழுப்புரத்துல புத்தகக் கண்காட்சி...








விழுப்புரத்துல தொடங்கியாச்சு புத்தகக் கண்காட்சி...

ரோட்டரி சங்கத்தின் புதிய முயற்சிக்கானத் தொடக்க விழா, அதுதாங்க புத்தகக் கண்காட்சி – விழுப்புரம் விஆர்பி மேனிலைப் பள்ளியில இன்னைக்குக் காலையில  நடந்தது. (நிறைவு விழா அடுத்த மாசம் ரெண்டாந் தேதி!)

எப்படியும் முப்பது அரங்குகள் இருக்கலாம். பல்வேறு பதிப்பகத்தினரும் வந்திருக்காங்க. விழுப்புரத்தை நம்பி!

விழா ஏற்பாட்டாளர்கள், பதிப்பகத்தாரின் நம்பிக்கைக்கு விழுப்புரம் மக்கள்தான் வலு சேர்க்கணும். செய்வாங்க!

கண்காட்சி தினமும் காலையில 11 மணியில இருந்து இரவு 9 மணி வரைக்கும் நடக்கும்.

தினமும் மாலை 6 மணிக்கு மாணவ மாணவிகளோட கலை நிகழ்ச்சி, இலக்கிய நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, யோகா நிகழ்ச்சிகள் எல்லாம் வச்சிருக்காங்க.

இதுமட்டுமில்லாம, பல்வேறு தலைப்புகள்ல அறிஞர் பெருமக்களோட சொற்பொழிவுகள் கூட இருக்கு.

அடுத்த மாதத் தொடக்கத்துல ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் புத்தகக் கண்காட்சியில நடக்கப்போவுது. என்னன்னு அப்புறம் சொல்றேன்!


இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நீங்க அவசியம் குடும்பத்தோட வாங்களேன்..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக