பழவலம்...
செஞ்சி - மழவந்தாங்கல் காப்புக் காடுகளின் சாலையின் ஊடாகச் சென்றால் இந்தக் கிராமத்தை அடையலாம்.
விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையோர கிராமம்.. அடுத்து, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.
இதோ, இங்கு நெடிதுயர்ந்து நிற்கும் 'பெரிய மலை'. இந்த மலையைச் சுற்றி, சுமார் மூன்று கி.மீ.க்குச் செல்கிறது கோட்டையின் சுற்றுச்சுவர்!
கோட்டையின் பிரம்மாண்ட வாயில் நம்மை வரவேற்கிறது!
கோட்டை எதுவும் இல்லை...
உள்ளே அண்மைக் காலத்தியக் குடியிருப்புகள்...
சில இடங்களில் பாறைகளின் மீது சிதைந்த செங்கல் கட்டுமானங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன!
வயல்களின் ஊடாக ஒரு சிவாலயம். பாறைகளுக்கு மத்தியில் ஐயனார் கோயில்.
ஐயனார் கோயிலின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக, வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள குதிரைச் சிற்பங்கள்.
அனைத்தும் கருங்கல் சிற்பங்கள்!
"பழவலம் கோட்டை"- வேட்டவலத்தை ஆட்சி செய்த 'வானாதிராயர்' காலத்தில் அதாவது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பண்டமாற்று செய்துகொள்ளும் வணிகக் கோட்டையாக இந்த இடம் இயங்கி இருக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
ஆனால், அப்படி இந்த இடம் இருந்ததா என்பது ஆய்வுக்கு உரியதாகும்.
வருடக்கணக்கில் செஞ்சியை முற்றுகையிட்டிருந்த முகலாயப் படைகள்.. ஒரு கட்டத்தில் தங்கள் தானியத் தேவைகளுக்கு வந்தவாசியை நோக்கி தான் செல்ல வேண்டியிருந்தது.
செஞ்சியின் வரலாறுகளிலும் ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளிலும் பழவலம் கோட்டை குறிப்பிடப்பட்டு இருப்பதாக எனக்கு நினைவில்லை!
பழவலம் கோட்டை குறித்த மேலதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..!
(அழைத்துச் சென்ற நண்பர் தேவகுமார் முருகன் க்கு என் நன்றி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக