இன்று (ஜுன் 3) அகவை 79ல் அடியெடுத்து வைக்கிறார் செஞ்சியார்!
செஞ்சி அருகே உள்ள அவியூர் கிராமத்தில் தொடங்கியது இவரது வாழ்க்கைப் பயணம்…
திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளுள் ஒருவர்!
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
ஒன்றிய செயலாளர் முதற்கொண்டு மாவட்ட செயலாளர் வரையிலான பொறுப்புகளை திமுகவில் வகித்தவர்.
குறிப்பாக, ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட திமுகவின் மாவட்ட செயலாளராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி மத்திய அமைச்சர் வரையிலான பல்வேறு பதவிகளை வகித்தவர்.
ஈழப் பிரச்சினையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட செஞ்சியார், அவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர். ஈழத் தமிழர் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சென்னை வந்திருந்த தமிழீழத் தலைவர் இவரது அறையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சியார் அவர்களின் அரசியல் பொதுவாழ்க்கைக்கு இது 50ஆம் ஆண்டு!
இதனையொட்டி அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலுக்கு அவர் வழங்கிய நேர்காணல்.. இணைப்பில்..
https://youtu.be/7Hgf0pP6Ps8
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக