வியாழன், 6 அக்டோபர், 2016

காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சம்



விழுப்புரம் ரயில் நிலையம் கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை, ரயில்வேயின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. 

இங்கு பரந்துவிரிந்தப் பரப்பளவில் அமைந்திருந்த லோக்கோ ஷெட் இதற்கு முக்கியக் காரணமாகும்.

வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் பயணிக்கும் நீராவி என்ஜின்கள், இங்குவந்துதான் கரி மற்றும் தண்ணீரை நிரப்பிக் கொள்ளும். என்ஜின் ஒரு மார்க்கத்தில் இருந்து இன்னொரு மார்க்கத்திற்கு திருப்புவதற்கு லோக்கோ ஷெட்டுக்குள் எடுத்துச் செல்லப்படும்.

80களின் இறுதியில் நீராவி என்ஜின்களின் பயன்பாடு அற்றுவிட்டப் பிறகு, விழுப்புரம் லோக்கோ ஷெட்டின் முக்கியத்துவமும் மறைந்துவிட்டது. பழைய கட்டடமும், சில தடயங்களும் இதற்கான சாட்சிகளாக இன்றும் நிற்கின்றன.

குறிப்பாக, ரயில் நிலையத்தையொட்டியுள்ள கிழக்குப் பகுதியில் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன இந்தப் பிரம்மாண்ட, இரும்புத் தூண்கள். இவற்றை கடினமான கான்கிரீட் அடித்தளங்கள் தாங்கியுள்ளன.

என்ஜின்கள் தண்ணீர்ப் பிடிப்பதற்கு இந்தத் தூண்களும், இதில் பொறுத்தப்பட்டுள்ள சட்டங்களும் பயன்பட்டிருக்கலாம்..!

மறைந்துப் போன லோக்கோ ஷெட்டுக்கு மட்டுமல்ல, காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்ச அடையாளங்களாகவும் இவை காட்சித்தருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக