விழுப்புரத்தில்
அப்போதெல்லாம் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் என்றால், நகராட்சி மைதானம்தான்.
மேடையெல்லாம்
போட வேண்டியதில்லை. இருக்கவே இருக்கிறது, நகராட்சிக் கலையரங்கம். அதிலேயே மேடை
அமைத்துக் கொள்ளலாம். கிழக்குப் பார்த்த முகம். சென்டிமென்ட் பரவாயில்லை!
இந்திரா
காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்டத் தலைவர்கள் பலரும் இந்த மேடையில்
உரையாற்றியதாக நினைவு.
மேடையின்
முன்புறம் அமர்ந்துத் தலைவர்களின் பேச்சைக் கேட்ட ஆயிரக்கணக் கானவர்களில் நானும்
ஒருவன். இதுபோன்ற நினைவலைகள் உங்களுக்குள்ளும்
எழலாம்.
பின்னர்
வந்தக் காலங்களில் எல்லாம் மாறியது. மைதானத்தில் எந்த இடத்திலும் அவரவர்
வசதிக்கேற்ப மேடையினை அமைத்துக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இருப்பை
இழந்ததுக் கலையரங்கம். இந்த நிலை ஏற்பட்டு 10, 15 ஆண்டுகளாகியிருக்கும்.
அரசியல்
கட்சிகளைப்போல், நகராட்சி நிர்வாகமும்கூட கலையரங்கத்தின் பாதுகாப்பையும்
பராமரிப்பையும் கைவிட்டது.
இப்போது,
விழுப்புரத்தின் பாழடைந்தக் கட்டடங்களில் ஒன்றாக மாறிவிட்டது இக்கலையரங்கம்.
இதனைச்
சீரமைக்க வேண்டும் எனும் கோரிக்கை எங்கிருந்தும் எழவில்லை என்பது தான் அதிசயம்.
நகராட்சி
மைதானமே தன் முகத்தை இழந்தபிறகு, கலையரங்கம் களையிழந்ததில் வியப்பில்லை..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக