ஞாயிறு, 3 நவம்பர், 2019

பூவரசங்குப்பம் அருகே முதுமக்கள் தாழிகள்

பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் பட்டாச்சாரியார் திரு.பார்த்தசாரதி அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

‘அருகில் முதுமக்கள் தாழிகள் இருக்கிறன்றன‘ எனும் தகவலைப் பகிர்ந்து கொண்டவர் அவர்தான்.

02.11.2019 சனிக்கிழமையன்று நாம் அங்குச் சென்றபோது, கை காட்டிவிட்டு நின்றுவிடாமல், பட்டாச்சாரியார் நம்முடனேயே பயணித்தார். தடயங்களை அடையாளப்படுத்தினார். மகிழ்ச்சி!

எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தை ஒட்டிவரக்கூடிய, தென்பெண்ணையின் கரை ஓரங்களில்...



அப்பப்பா! எங்கெங்குக் காணினும் முதுமக்கள் தாழிகள்! பானை ஓடுகளின் சிதறல்கள். குறிப்பாகக் கருப்புச் சிவப்புப் பானை ஓடுகள்!


இன்னும் ஏராளம் இருந்திருக்க வேண்டும். ஏன், செங்கற் கட்டுமானங்கள்கூட இங்குக் காணப்பட்டதாம்! எல்லாம் அழிந்துவிட்டன.


எஸ்.மேட்டுப்பாளையம் மேல்குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.


இந்தப் பணியின் போதுதான் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன!

மேலும் அழிவுக்கு உள்ளாகாமல் தடுக்க வேண்டும். இருக்கும் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும்!


இந்தப் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதி மக்களுக்கும் இருக்கிறது!


இந்தப் பயணத்தில் வழக்கம்போல் தங்களை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், கொளுத்தும் வெயிலில், களப்பணியில் ஈடுபட்ட அன்பிற்கினியத் தம்பிகள் கிருஷ்ணா, விஷ்ணு ஆகியோரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

                    தினமணி 03.11.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக