செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பொம்மையார் பாளையம் ஓடை

புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை.. கிழக்கில் பரந்து விரிந்து காணப்படும் வங்காள விரிகுடா..

 

மேற்கில் அமைந்துள்ளது பொம்மையார் பாளையம் கிராமம். விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டது.

 

இங்க இருக்கும் மயிலம் பொம்மபுர ஆதினம் ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இதுகுறித்து நாம தனியே ஒரு பதிவுல விரிவா பாக்கலாம்.

 

ஆதினத்துக்குப் பக்கத்தில் கொஞ்சம் தூரம் போகணும். இதோ கிராமத்துக்குள்ள போகும் செம்மண் பாதை.

 

கொஞ்சம் தூரம் வந்ததுமே இதோ நம்ம கண்ணு முன்னாடி இயற்கை எழிலோடு அழகா காட்சி தருது இந்த செம்மண் பூமி.

 

கடும் வறட்சி கடும் காற்று.. இந்த இயற்கையின் விளைவாக ஏற்படுவது தான் தேரிக் காடுகள் எனப்படும் செம்மண் பூமி.

 

இப்படியான தேரிக் காடுகள தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் நிறைய நாம பாக்கலாம்.

 

1800 களின் இறுதியில் மதப் பிரச்சாரம் செய்யறதுக்காக திருநெல்வேலி வந்த ராபர்ட் கால்டுவெல்.. இடையன் குடி பகுதியில் இருந்த தேரிக் காடுகள பாத்து வியந்தாரு.

 

இந்த மணல வியன்னா பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பி வைச்சாரு.

 

வியன்னா பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் என்ன சொல்லுச்சுன்னா இதுபோன்ற மணல் உலகத்தில் வேறெங்கும் இல்லை அப்படி ன்னு.

 

ராபர்ட் கால்டுவெல் லும் வியன்னா பல்கலைக் கழகமும் அப்பவே பொம்மையார் பாளையம் வந்திருந்தாங்க ன்னா இன்னும் ஆச்சரியப்பட்டு போயிருப்பாங்க.

 

இதோ இங்கேயும் தேரிக் காடுகள் இருக்கே ன்னு.

 

ஆமாம் இயற்கையின் அதிசயமான செம்மண் பூமி விழுப்புரம் மாவட்டத்திலேயும் இருக்கு.

 

சிறியதும் பெரியதுமான செம்மண் குன்றுகள்.. பாக்கவே நமக்கு கொஞ்சம் பயமாகவும் நிறைய பிரம்மிப்பாகவும் இருக்கு.

 


குன்றுகளுக்கு இடையில இயற்கையான நீர்வழிப் பாதை ஓடை.

 

மழைக் காலங்களில் நாம இந்த இடத்தைப் பாக்கணுமே

 

யாயும் ஞாயும் யாராகியர் ங்கற குறுந்தொகை பாடல் வர்ற செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தான் கலந்து எனும் வரிகள் தான் நம் நினைவுக்கு வரும்.

 

கடந்த நாப்பது அம்பது வருஷத்துல நிறைய தமிழ் படங்களோட சண்டை மற்றும் பாடல் காட்சிகள் இங்க படமாக்கி இருக்காங்க.

 

குறிப்பாக சொல்லணும் னா செல்லமே படத்தில் வரக் கூடிய 

ஆரிய உதடுகள் உன்னது

திராவிட உதடுகள் என்னது

ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே 

அப்படிங்கற பாடலை நீங்க கொஞ்சம்  அசைப் போட்டு பாக்கலாம்.

 

அதனாலேயே இந்த இடத்துக்கு ஷூட்டிங் ஓடை ன்னு பேர் வைச்சு இருக்காங்க உள்ளூர் மக்கள்.

கேரள பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் 2001 இங்க பொம்மையார் பாளையம் வந்தாங்க.


அக்டோபர் 10 தேதியில் இருந்து 16 ம் தேதி வரைக்கும் ஆறு நாள் இங்க ஆய்வுகள் செஞ்சாங்க. அப்ப

பழங்கால மக்கள் பயன்படுத்தின கல்லாயுதங்கள் ஆயுதங்கள் செய்ய பயன்படும் கருவிகள் னு நிறைய கண்டு பிடிச்சாங்க.

 

அதுல பாசில் னு சொல்லக் கூடிய தொல்லுயிர் எச்சம் ஒண்ணும் கிடைச்சது.

 

அத கேரளாவுக்கு எடுத்து போய் பல மாதங்கள் ஆய்வு செஞ்சாங்க.  ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் இந்த ஆய்வு நடந்துச்சு.

 

2003 இதன் முடிவுகள் வெளிவந்தப்போ உலகமே அதிர்ந்து போனது. ஏன் தெரியும் ங்களா?

 

பொம்மையார் பாளையத்தில் கிடைச்சது, தொல்லுயிர் எச்சமாக மாறிப் போன ஐந்து மாதக் குழந்தையின் மண்டை ஓடு ன்னு.

 

இந்த மண்டை ஓட்டோட வயசு என்ன தெரியும் ங்களா 2 லட்சம் வருஷங்கள்.

 

அடேயப்பாஇத்தனை வருஷமா ன்னு நீங்க ஆச்சரியப்படறீங்க.ண்மைதான் ங்க.

 

கேரள ஆய்வுக் கூடங்கள் ல்ல அறிவியல் ரீதியா நிரூபிக்கப்பட்ட விஷயம் இது.

 

ரெண்டு லட்சம் வருஷங்கள் அப்படிங்கறது மனித குல வரலாற்றுல மிகப்பெரிய விஷயம்.

 

அதாவது 2 லட்சம் வருஷங்களுக்கு முன்னாடியே பொம்மையார் பாளையம் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து இருக்காங்க அப்படி ங்கறது நாம பெருமைப்பட வேண்டியது இல்லீங்களா.

 

ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொம்மையார் பாளையம் மண்டை ஓடு பெரிய அளவில் பேசப்படல அப்படிங்கறது தான் வருத்தமான விஷயம் தான்.

 

இதுப்பத்தி என்னோட சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை யிலான புத்தகத்திலும் பதிவு செஞ்சு இருக்கேன்.

நம்ம பெருமைய  நாம தான் சொல்லணும்... பொம்மையார் பாளையம் ஓடையப் பத்தி வியந்து வியந்து சொல்லிட்டே இருப்போம்.

முழுமையான காணொளிக்கு:

https://youtu.be/XN3mIEXVZHY


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக