ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

விழுப்புரம் மீன் மார்க்கெட்...

 இதுதான் விழுப்புரம் மீன் மார்க்கெட்... 


நள்ளிரவு நேரங்கள் ரொம்பவும் பரபரப்பா இருக்கும்.


கன்னியாகுமரியில் இருந்து மட்டும் இல்ல  ஆந்திரா கர்நாடகா கோவா ன்னு பல இடங்கள் இருந்தும் மீன்கள் இங்க வருது.

 உயிரோடு துள்ளும் ஏரி மீன்கள்


அப்புறம் பல வகையான கடல் மீன்கள், இறால் நண்டு ன்னு நிறைய வெரைட்டீச நாம இங்க நாம பாக்கலாம். 

அப்ப ல்லாம் விழுப்புரம் எம்ஜி ரோடுல தான் இந்த மீன் மார்க்கெட் இருந்துச்சு.


இப்பதான் ஓரு வருஷத்துக்கு முன்னாடி தான் பெருந்தொற்றக் காரணம் காட்டி விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இந்த இடத்துக்கு  மாத்தினாங்க.

வாரத்துல எல்லா நாளுமே நள்ளிரவு முதல் அதிகாலை வரை இந்த மீன் கடைகள் இயங்கிட்டு இருக்கும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம்.. மீன் மார்க்கெட் களை கட்டும்.

நிறைய பேரு மீன் வாங்க வருவாங்க


வெளியே வாங்கறதவிட இங்கக் காசு கொறச்சலா இருக்கும் அப்படிங்கறதுக்காகத்தான். உண்மையும் அதுதான்.

வாங்கின மீன்கள இங்க ஆஞ்சியும் குடுக்கறாங்க. ஒரு கிலோவுக்கு 20 ரூபாயாம்.


இங்க வர்றவங்கப் பெரும்பாலும் மொத்த வியாபாரிகள் தான்.

விழுப்புரம் சுத்துவட்டார கிராமங்கள் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை திண்டிவனம்  செஞ்சி ன்னு அருகாமையில் இருக்கும் ஊர்களுக்கும் விழுப்புரம் மீன் மார்க்கெட் இல் இருந்து மீன்கள் பயணமாகும்.

முடிஞ்சா நீங்களும் கொஞ்சம் இரவு நேர தூக்கத்தை தொலைச்சிட்டு விழுப்புரம் மீன் மார்க்கெட் பக்கம் போய்ட்டு வரலாம். 


என் மகன் சித்தார்த்தனுடன் விழுப்புரம் மீன் மார்க்கெட் சென்று பதிவு செய்தது... 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி.. 


 



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக