இந்திய ஓவியக்கலை மரபு, தென்னிந்திய ஓவியக்கலை மரபு, தமிழக ஓவியக்கலை
மரபு... என்பது பற்றியெல்லாம் நாம் தொடர்ந்துப் பேசி வருகிறோம்.
இத்தகைய ஓவியக்கலை மரபு(கள்) இன்றும் நம்மிடையே வாழ்வதற்கானத்,
தொடர்வதற்கான முக்கியக் காரணியாக நான் கருதுவது, நம் வீட்டுப் பெண்மணிகள் வாசலில்
போடுகிறார்களே இந்தக் கோலங்களைத்தான்.
அதுவும், மார்கழி மாதக் கோலங்களுக்கு அப்படி ஒரு சிறப்பு நம்ம
மண்ணில்.
இதோ, மார்கழி விடைபெற்றுவிட்டது. தைப் பிறந்துவிட்டது.
இந்தத் தை மகளை வரவேற்கத்தான் வீட்டுக்கு வீடு எத்தனையெத்தனைப்
போட்டி.
விழுப்புரத்தின் வீதிகளில் அடியெடுத்து வைத்து நடக்க இடமில்லை. அழகியக்
கோலங்களின் மீது கால்வைக்கவும் மனமில்லை.
இன்று அதிகாலை எப்படியோ இவற்றையெல்லாம் கடந்து வீட்டுக்கு
வந்தாகிவிட்டது. என் வீட்டு வாசலில்கூட சின்னதாய் ஒரு கோலம். அதைத் தாண்டி
வீட்டுக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தேன்.
நம் ஓவியக்கலை மரபைக் காப்பாற்றிவரும் மங்கையரைப் போற்றுவோம்.
பொங்கலோ பொங்கல் எனப் பாடுவோம்..!
(விழுப்புரம் மருதூர் சந்தானகோபாலபுரம், முத்தியால் தெரு,
மாந்தோப்புத் தெரு மற்றும் கந்தசாமி லேஅவுட் பகுதிகளில் வரையப்பட்டக் கோலங்களில்
சில நண்பர்களின் பார்வைக்கு..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக