“அஸ்வகோஷ்“ என அனைவராலும்
அறியப்பட்டவர், எழுத்தாளர் இராசேந்திர சோழன் (மயிலம்).
தமிழகத்தின் ஆகச்சிறந்த
இலக்கிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவரான இவர், கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு, “நெம்புகோல்“
மூலமாக, புரட்சிகரச் சிந்தனை யாளராக என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகமானவர்.
தோழர்.பெ.மணியரசன்
அவர்களுடன் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்துப் பணியாற்றியவர். தமிழர்
கண்ணோட்டம், மண் மொழி மக்கள் ஆகிய இதழ்களை நடத்தியவர்.
விழுப்புரத்தில் நேற்று
நடந்த மருதம் விழாவில் தோழர்.இராசேந்திரசோழன் அவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
நானும் அவரை நேரில் பாராட்டி மகிழ்தேன்.
இவ்விழாவில் பேசிய
இராசேந்திரசோழன் அவர்கள், “சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி நடத்தப்படும்
நிகழ்வுகளில் எழுத்தாளர் பலரும் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள். இவர்களில்
ஒருவர்கூட நடுநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களாக இல்லை. இலக்கிய உலகில் பழைய
தென்னார்க்காடு மாவட்டம் புறக்கணிக்கப் படுகிறது“ என வேதனையுடன் பதிவு செய்தார்.
கடந்த ஆண்டு நடந்த இதேவிழாவில்
பங்கேற்ற எழுத்தாளர் இரவிக்குமார் அவர்களும், “இலக்கியத்தில் மதுரை, நெல்லை
போன்றவை தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்றன. வடமாவட்டப் படைப்பாளர்கள், அவர்தம்
படைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன“ என்று பேசியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
உண்மைதான்.
மதுரை, நெல்லை,
நாஞ்சில்நாடு இலக்கிய ஆளுமைகளை நாமும் மதிக்கிறோம். தமிழிலக்கியத்தில் அவர்களுடைய
பங்களிப்பு அளப்பரியதுதான்.
அதேநேரம், வடமாவட்டப்
படைப்பாளர்களும் அவர்களுடையப் படைப்புகளும் இவர்களுக்கு எந்த விதத்திலும்
குறைந்தது கிடையாதே! மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகள் இங்கும் இருக்கிறார்கள்,
இயங்குகிறார்கள் என்பதும் உண்மைதானே!
விருதுகள் வழங்குவதிலும்,
எழுத்துக்களை அங்கீகரிப்பதிலும் நடுநாட்டை அல்லது வடமாவட்டங்களை நவீன இலக்கிய
உலகம் புறக்கணிப்பது ஏன்....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக