கோ.செங்குட்டுவன் பதிவு எதிரொலி... என்று
எழுதலாமா?
எழுதலாம். உண்மை அதுவாகவும் இருக்கலாம்.
பாருங்களேன், விழுப்புரம் இரயில் நிலையத்தின்
5ஆவது பிளாட்பாரத்தில், குழாய் உடைந்துத் தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதை, நேற்று
முன்தினம் (4ஆம் தேதி) முக நூலில் புகைப்படத்துடன் பதிவுசெய்திருந்தது
நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
என்ன அதிசயம்? இன்று காலை, இரயில்
நிலையத்துக்குப் போயிருந்தபோது கவனித்தேன், உடைந்தக் குழாய் சீர்
செய்யப்பட்டிருந்தது. தண்ணீர் வீணாக வழிந்தோடவில்லை.
நேற்று காலை பார்க்கும்போது ஒன்றும் மாற்றமில்லை.
பிறகுதான் வேலை நடந்திருக்கிறது.
மகிழ்ச்சி. உடனடி நடவடிக்கைக்கு இரயில் நிலைய
நிர்வாகத்துக்கு நன்றி சொல்லத் தான் வேண்டும். சொல்வோம்.
விழுப்புரம் இரயில் நிலையத்தில் இன்னும் பல
இடங்களில் கை கழுவும் இடங்களில் இருந்துத் தண்ணீர் பிளாட்பாரங்களில் வழிந்து
கொண்டிருப்பதையும் நிர்வாகம் சரி செய்தால் நன்றாக இருக்கும்..!
முன்பும் பின்புமான இரண்டுப் புகைப்படங்களும்
உங்கள் பார்வைக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக