விழுப்புரத்துல ரோட்டரி சங்கம் செஞ்ச நல்ல காரியத்துல ஒண்ணு, ‘முக்தி’ய சொல்லலாம்.
சுடுகாடு மாதிரின்னு இல்லாம ஒரு தோட்டம் போலப் பராமரிக்கறது,
பாராட்டப்பட வேண்டியதுதான்.
நாலு வருசத்துக்கு முன்னாடி, என் தாயாரின் சடலத்த எரிக்கப் போனப்பதான், வெளியில
இருந்து வந்த நபர்கள், எதற்கெடுத்தாலும் காசுப் பிடுங்கி, கோவத்த ஏற்படுத்துனாங்க.
அப்புறம், எரிச்ச சர்டிபிகேட் வாங்கும்போதுதான் கவனிச்சேன், அதுல
சீரியல் நம்பர் எதுவும் கிடையாது.
அப்புறம், மயானத்துல இருந்து வண்டி அனுப்பறதுல இருந்து, இறுதிச்
சடங்கு முடிக்கிற வரைக்கும் கும்பல் ஒன்னு, ரேட் பிக்ஸ் பண்ணிக்கிட்டு
சுத்திக்கிட்டு இருந்தது.
இதெல்லாம் ரோட்டரி பாத்துக்கும்னு விட்டுட்டோம். நாம என்ன அடிக்கடியாக
அங்கப் போறோம்?
ஆனா, இப்ப, எல்லாம், ஒரு கட்டுக்குள்ள வந்துகிட்டு இருக்கிறதா ஒரு
தகவல்.
ரோட்டரி நிர்வாகிங்க இதுல முழு கவனம் செலுத்துறலாங்கலாம். மகிழ்ச்சி.
அட, மயானத்துக்குள்ள இருக்கிற, பூங்காவப் பாருங்க, சீரமைப்புகள்
நல்லாத்தான் இருக்கு. மயானம்ங்கற ஒரு நினைப்பே நமக்கு வரல!
இன்னும் சி.சி.டிவி கேமரா எல்லாம் பொருத்தி, எந்த முறைகேட்டுக்கும்
வழி இல்லாம செய்யப் போறாங்களாம். சந்தோசம்தான்.
விழுப்புரத்துக்கு நல்ல வரவு, இந்த முக்தி.
இத நல்லா கொண்டுப் போனா, எல்லாருக்குமே நல்லதுதான?
ரோட்டரியின் முயற்சிகளைப் பாராட்டலாம்ங்க..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக