வாசிப்புத் தளத்தில் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு
வருகிறது. ‘இணையத்தளங்களின் அசுரத்தனமான வளர்ச்சி, நூல்களை முடக்கிப் போட்டு
விட்டது’.
இதில் உண்மையும் இருக்கலாம். புத்தகக் கண்காட்சிகளை நடத்தினால்
மட்டுமே, புத்தகங்களை விற்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.
எப்படிப் பார்த்தாலும் புத்தகங்களின் விற்பனை அப்படியொன்றும்
பிரம்மாண்டமாக இல்லை என்பதுதான் எதார்த்தம்.
எத்தனை நூல்கள் அச்சிடப்பெறுகின்றன? அதில் எத்தனை விற்பனையாகின்றன?
எனும் விவரங்களை பதிப்பகத்தார் வெளியிட்டால், உண்மை நிலவரம் தெரியவரும்.
தனிப்பட்ட முறையில் நூல்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் என்னைப்
போன்றோரும் இதன் பாதிப்பினை நன்கு உணர்ந்திருக்கிறோம்.
அரசு நூலகத்தில் உள்ள இலட்சக்கணக்கான நூல்களை எத்தனைப் பேர் எடுத்துப்
படிக்கின்றனர் என்பதையும் கணக்கிட்டால், இன்னும்கூட இதில் தெளிவு வரலாம்.
நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, புத்தகங்களைப்
புரட்டிப்போட்டுவிட்டது என்பது உண்மைதான்.
ஆனால், எழுத்தாளன் எழுதவேண்டும். அவன் படைப்புகள் வெளிவந்து
கொண்டுதான் இருக்க வேண்டும்.
பல்லக்கில் பவனிவந்த சாமியார்களே உயர் ரக கார்களில் சுற்றிவரும்போது, வளர்ந்து
வரும் தொழில்நுட்பத்தினை எழுத்தாளன் ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
நான் இன்னமும் புத்தகங்களாகவேதான் வெளியிடுவேன், அதை நீங்கள் வாங்க
வேண்டும் என அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்?
நூல்களை மின்நூலாக்கம் செய்வது, அவற்றை சமூக வலைத்தளங்களில்
வெளியிடுவது போன்றவை, இன்றையச் சூழலில், இளைய தலைமுறையினை, பரந்துபட்ட வாசகர்களை
சென்றடைவதற்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.
இப்படியான உத்தியில், என்னை நான் மாற்றிக்கொள்வதுபற்றியும் யோசித்து
வருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக