உங்களின்
வாழ்த்துக்களுடன் இனிதே நடந்தது ‘அருங்காட்சியகம் அவசியமும் அவசரமும்' நூல்
வெளியீட்டு விழா...
திருவாளர்
இரா.இராமமூர்த்தி (நிறுவுநர்: பாரதி சிந்தனைப் புலம்) அவர்கள் தலைமை யேற்றார். முல்லை
புத்தக அங்காடியின் நிறுவுநர் தோழர்.தே.ஏழுமலை வரவேற்றார். கல்வெட்டாய்வாளர்
திரு.சி.வீரராகவன், பாபு அச்சகத்தார் கோ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரா.த.பழமலய்,
புதுச்சேரி தோழர்.சுகுமாரன் ஆகியோர்
வாழ்த்திப் பேசினர்.
புதுச்சேரி,
தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். முனைவர்.நா.இளங்கோ
அவர்கள் நூலினை வெளியிட, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் திரு.வீர.பாலகிருஷ்ணன்
அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர்
நா.இளங்கோ அவர்கள், ‘வரலாறு எப்படியெல்லாம் எழுதப்படுகிறது’
என்பது குறித்து விளக்கினார். ‘வரலாறு விளிம்புநிலை மக்களிடமிருந்துத் தொடங்கப்பட
வேண்டும்’ என
வலியுறுத்திய அவர், தொண்டை மண்டலத்தின் தொன்மைக் குறித்தும் விரிவாகவே பேசினார்.
புதுச்சேரி
காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ‘விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்க நான் ஒன்றுபட்டு
நிற்க வேண்டும்’ எனும்
வேண்டுகோளை முன் வைத்தார்.
முடிவில்,
இல்லந்தோறும் நூலக இயக்கத்தின் தலைவர் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில், நண்பர்களும்
தோழர்களும் திரளாகப் பங்கேற்றது மனநிறைவைத் தந்தது.
விழுப்புரம்
மாவட்டத்துக்கு அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் எனும் விதை
அனைவர் மனத்திலும் விதைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது, விருட்சமாகும் எனும்
நம்பிக்கை இருக்கிறது.
இதற்கான
ஆவணப்பதிவாக எனது நூலும், இதற்கானத் தொடக்கமாக நூல் வெளியீட்டு விழாவும் நடந்தேறியுள்ளது.
முகநூல் வழியாக
என் அழைப்பினை ஏற்று விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றி... நன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக