பனையபுரம் நடராசன். 30 ஆண்டுகாலம் தொடரும் தோழமை.

சாராய சாம்ராஜ்யத்தை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்காக, விழுப்புரம்
சாராய வியாபாரிகளால் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டவர்.
புரட்சியின் மீதும், புரட்சிகர இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துத்
தொடர்ந்துத் தன்னை ஈடுபடுத்தி வருபவர்.
எனக்கெல்லாம், இவற்றின்மீது வறட்சி ஏற்பட்டு, ஒருகட்டத்தில் ஒதுங்கிக்
கொண்டேன்.
ஆனாலும், நடராசன் இப்போதும் சொல்கிறார்: ‘புரட்சி வெல்லும்.’
வர்க்க அரசியல் பேசியவர்களில் பலர்
சுயசாதிப் பிடியில் தீவிரமாகச் சிக்கிக் கொண்டனர்.
வெகுசிலரோ, கோடிகளுக்கும் அதிபதிகளாகி விட்டனர்.
இவர்களும் இன்று, புரட்சிகர அரசியலைப் பேசிவருகிறார்கள் என்பதுதான்
வேடிக்கை!
இத்தகையப் போலிகளுக்கு மத்தியில்,
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு,
பாட்டாளியாய் இன்றும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு.
‘புரட்சி வெல்லும்’ எனும் நம்பிக்கையோடு
களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பனையபுரம் நடராசன், நிஜமானவர்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக