விழுப்புரம் புதுவை சாலையில் கண்டமங்கலம். இங்கு இருக்கும் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையம். இங்க இருந்து 2 கிமீ போனால் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை அடையலாம்.
அழகான அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது.
இதோ… மகான் படே சாயபு ஆலயம்.. சித்தர் பீடம்.
மகான் படே சாயபு.. இவர் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மெளனம் தான் இவரது மொழி. விபூதியே இவர் தரும் பிரசாதம்.
இவரும் இவரது அன்பும் ஆற்றலும் புதுவை சுற்றுவட்டப் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம்.
சித்தராக நின்று இவர் செய்த சித்துக்கள் ஏராளம்.. ஏராளம்..
ராமரெட்டிக்குளம், மண்டகப்பட்டு, பண்ணக்குப்பம் திருக்கனூர் சின்னபாபு சமுத்திரம் உள்ளிட்டப் பகுதிகள் இன்றும் இவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பேசி வருகின்றன.
தன்னைத் தீண்டிய நாகத்திற்கே மோட்சம் அளித்தவர் என்பதால் மகானாக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
மகான் படே சாயபு இசுலாமியர் தான். ஆனாலும் சிவனியத்தைத் தம்முள் ஏற்றுக் கொண்டவர்.
இமயமலை அடிவாரத்தில் புதைந்திருந்த உளிபடாத கல்லினை தன் கைகளால் தொட்டு இலிங்கமாக உருப்பெறச் செய்ததாக நம்பப்படுகிறது.
இசையின் மீது ஈடுபாடு கொண்டவர். கையில் தும்புரு எனும் இசைக் கருவியை ஏந்தி இருக்கிறார். இந்த இடத்தில் வீணாதார தட்சிணாமூர்த்தி நம் நினைவுக்கு வருகிறார்.
மகான் படே சாயபு சின்னபாபு சமுத்திரத்தில் வாசம் செய்தார். இங்கிருக்கும் மகிட மரத்தடி தான் இவரது ஞான ஸ்தலம்.
மகான் படே சாயபு 1868 பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அவரது ஜீவ சமாதியை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மகானின் மூச்சுக் காற்று இன்றும் உலவுகிறது… அவரது அருளாசி இன்றும் தொடர்கிறது.. மக்கள் மனதில் இருக்கும் ஆழமான நம்பிக்கை.
மேலும் விரிவான தகவல்களுக்கு...
https://youtu.be/XcNMlZlDH0s