விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 147 ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது...
விழாவின் முக்கிய நிகழ்வானப் புனிதரின் தேர் பவனி நேற்று 03.12.2021 வெள்ளி மாலை நடந்தது.
பெருந்தொற்றின் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருவிழா ஆலய வளாகத்தின் உள்ளேயே நடந்தது.
நேற்று தான் புனித பிரான்சிஸ் சவேரியார் விழுப்புரம் வீதிகளில் வலம் வந்தார்!
பெருமக்களிடம் உற்சாகம் கரைபுரண்டது...
விழாவின் ஊடாக, ஆலயத்தின் வரலாற்றைப் பதிவு செய்தமைக்காக பங்கு தந்தை ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டேன்.
பதிவிற்கு உடனிருந்து உதவிய நண்பர் Pfm Dominic அவர்களுக்கு நன்றிகள்!
தேர் பவனி தொடர்பான காணொளி இணைப்பில்:
https://youtu.be/8OGeDt2wBaM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக