விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் னு சொன்னதுமே நம்ம எல்லாருக்கும் நினைவுக்கு வர்றது இங்க இருக்கும் உப்பளங்கள் தான். தமிழ்நாட்டுல தரமான உப்பு உற்பத்திக்குப் பேர் போனது மரக்காணம் உப்பு.
ஆனால் மரக்காணத்தில் இன்னொரு அதிசயம் இயற்கை அதிசயம் இருக்கு. அதுதான் இயற்கையாக அமைந்த சதுப்பு நிலக்காடுகள்.
பரந்து விரிந்து காட்சி தரும் பக்கிங்காம் கால்வாய். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 400 கிமீ பயணித்து மரக்காணம் வந்தடையும் பக்கிங்காம் கால்வாய் தனது 3 வது கட்ட பயணத்தை இங்க இருந்து தான் தொடங்குது.
கிழக்கே வங்கக் கடல். வடக்கே பக்கிங்காம் கால்வாய். இவற்றின் அருகில் இருப்பதுதான் மாங்குரோவ் எனப்படும் சதுப்புநிலக் காடுகள்.. ஈரநிலம்.
தமிழ்நாட்டில் பழவேற்காடு அடுத்தபடியா மிகப்பெரிய சதுப்பு நிலப் பகுதியாக இருப்பது மரக்காணம் சதுப்பு நிலக்காடுகள்.
இந்த பகுதிக்கு இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல சைபீரியா ஆஸ்திரேலியா ரஷ்யா தாய்லாந்து இலங்கை ன்னு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்து போகுதாம்.
பிளமேன்கோ ஓப்பன் பீல்டு பெலிகான் ஸ்டோக் னு பறவைகளின் பெயர்களைச் சொல்லிகிட்டே போகலாம்.
இதனால் மரக்காணம் பகுதியில பறவைகள் சரணாலயம் அமைக்கணும் அப்படி ங்கறது இந்தப் பகுதி மக்களோடு நீண்ட நாள் கோரிக்கை.. கனவு.
கழுவெளி எனப்படும் இந்தப் பகுதியில் இருக்கும் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு 7 ஆயிரத்து 422 ஏக்கர். இதுல 4 ஆயிரத்து 220 ஏக்கர் தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ஆனால் இந்தப் பரப்பளவு 600 சதுர கிலோமீட்டரில் இருந்து 75 சதுர கிலோமீட்டராக குறைஞ்சிடுச்சுன்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கு.
காரணம் இங்கு ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள்.
இவற்றில் இருந்து எல்லாம் இந்தக் கழுவெளி பகுதி மீட்கப்படணும் இங்க பறவைகள் சரணாலயம் அமைக்கணும் அப்படி ங்கறதுக்காக நண்பர் சர்வேஷ் குமார் போன்றவர்கள் தொடர் முயற்சி நடவடிக்கைகள்ல
ஈடுபட்டு வந்தாங்க.
போன அதிமுக அரசாங்கத்தில் கூட வானூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்ரபாணி அவர்கள் இந்தக் கோரிக்கையை சட்டமன்றத்தில் வைச்சாரு.
மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பிலும் சொன்னாங்க.
இப்போது அது வடிவம் பெற்று இருக்கு.
ஆமாம் ங்க.
வானூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் இருக்கும் கழுவெளி ஈர நிலம் உள்ளிட்ட 12 ஆயிரத்து 729 ஏக்கர் நிலத்தை பறவைகள் சரணாலயம் ஆக அறிவிக்கப்பட்டு இருக்கு. இதற்கான அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் நேற்று அதாவது 6.12.2921 அன்று வெளியிட்டு இருக்காங்க.
இந்த வகையில் தமிழ்நாட்டின் 16 வது பறவைகள் சரணாலயம் ஆக மரக்காணம் பறவைகள் சரணாலயம் அமையுது.
தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த ஆணை பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பாக இருக்கும் னு மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்து இருக்கார்.
விழுப்புரம் மாவட்டத்தின் நீண்ட நாள் கனவு நனவானது. நமக்கும் மகிழ்ச்சி தான்.
இருக்கும் ஈர நிலம் சதுப்புநிலக் காடுகள் பாகாக்கப்படும் அப்படிங்கற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக