புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்… விழுப்புரம் நவாப் பாளையத் தெருவில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த ஆலயம்.
1874 இந்த ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் நங்காத்தூர் பங்கில் இருந்த இவ்வாலயம் பின்னர் தனிப் பங்காகச் செயல்படத்தொடங்கியது.
இதன் கீழ் வழுதரெட்டி, சாலாமேடு, கண்டமானடி ஆகியவை துணைப் பங்குகளாகவும் எனதிரி மங்கலம், ஆலாத்தூர் தும்பூர் ஆகியவை கிளைப் பங்குகளாகவும் இருக்கின்றன.
இப்ப நீங்க பாக்கறது 1986இல் எழுப்பப்பட்ட புதிய ஆலயம். ஆனால் அதற்கும் நூறாண்டுக்கு முன்னதாகவே இங்கு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் எழுந்துவிட்டது.
அந்தப் பழைய ஆலயத்தை இப்பவும் நாம பாக்கலாம்.. வாங்க உள்ள போய் பாக்கலாம்..
ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஆலயம். இதன் கலைநயம் நமக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் உறுதித் தன்மை நமக்கு வியப்பை அளிக்கிறது.
அக்காலக்கட்டத்தில் ஆலயத்திற்குள் வழிபாடு நடத்தத் தமிழர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பெண்களுக்கென இங்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தனவாம்.
இதோ.. ஆலயத்திற்குள் இறைவனின் திருவடிகளில் ஆன்மா ஒன்று இளைப்பாறுகிறது.
நூற்றாண்டைக் கடந்த கலைநயமிக்க ஆலயத்தின் அழகை ரசித்து வெளியே வந்தேன்.
ஆலயத்தின் பங்கு தந்தை மதிப்பிற்குரிய ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்களைச் சந்தித்தேன்.
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் வரலாறு வழிபாடு பணிகள் மற்றும் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் குறித்தெல்லாம் அவரிடம் கேட்டறிந்தேன்.
பங்கு தந்தை அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இதோ உங்களுக்காக:
https://youtu.be/8wSWgBFAs7c
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக