விழுப்புரம் சங்க
இலக்கியப் பொதும்பரின் 32ஆம் ஆய்வரங்கம் நேற்று (வெள்ளிக் கிழமை) மாலை, முனைவர்
மா.சற்குணம் அவர்களின் தலைமையில் சிறப்பாகவே நடந்தேறியது.
ஆய்வாளர்களின்
உரையின் ஊடாகப், பாராட்டு விழாவும் இனிதே நடந்தது.
அண்மையில், தேசிய
அளவிலான விருதுப் பெற்ற, மதிப்பிற்குரிய அம்மையார் கவிஞர் முனைவர்.இரா.தமிழரசி
அவர்களுக்குப் பாராட்டுப் பட்டயம் வழங்கி கௌரவித்தனர்.
கூடவே, ‘பத்திரிகைத்
துறையில் பணியாற்றியப் பட்டறிவைப் பதிப்புத்துறையில் பயன்படுத்தி வருவதாக’ச் சொல்லி, எனக்கும்
பாராட்டுப் பட்டயம் வழங்கினர். மகிழ்ச்சி.
என் மனைவி, மக்கள்
மகிழ்ந்தத் தருணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்!
பேரா.த.பழமலய்,
ஆசிரிய மாமணி தெ.வே.சஞ்சீவிராயன் ஆகியோரும் விருதாளர் களைப் பாராட்டினர்.
இந்நிகழ்வினை
முன்னின்று நடத்திய, சங்க இலக்கியப் பொதும்பர் அமைப்பின் தலைவர் புலவர் ச.தமிழரசு,
புலவர் க.கதிர்வேலு, கவிஞர்கள் சீ.விக்கிரமன், தி.க.நாகராசன் உள்ளிட்ட
நிர்வாகிகள், உண்மையில்
பாராட்டிற்குரியவர்கள்.
மற்றவர்களைப்
பாராட்டுவதற்கு மனசு வேணுமே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக