சனி, 14 ஜூலை, 2018

தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி அவர்களுடன் சந்திப்பு

இவரது பல நூல்களை நான் படித்து வியந்து இருக்கிறேன்.

இவரது அயராத ஆய்வுப் பணி எனக்குள் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் சந்திக்க ஆவல் கொண்டச் சிறந்த மனிதர்.

இவர் தான், தொல்லியல் அறிஞர் திரு.மா.சந்திரமூர்த்தி அவர்கள்.

தமிழக அரசின் தொல்லியல் துறையில் நாற்பது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஐயா அவர்களுடன் தொலைப்பேசியில் அடிக்கடி பேசியதுண்டு. ஆனால் நேரில் தான் சந்தித்தது கிடையாது.

இன்று (14.07.2018) மாலை அந்தக் குறை தீர்ந்தது.

விழுப்புரம்  வந்திருந்த ஐயா அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
 உரையாடல் நீண்டது.

தொண்டை மண்டலத்தின் தொன்மை, சிறப்புகள் குறித்து விரிவாகவே பேசினோம்.

ஏராளமான நூல்களைப் படைத்துள்ள ஐயா சந்திரமூர்த்தி அவர்கள்,
தற்போது மேல்மருவத்தூர் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் குறித்த நூல் ஒன்றை தற்போது தயாரித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நூலாக்கத்தின் போது மேல்மருவத்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏராளமான தொன்மை வரலாற்றுச் சான்றுகளை கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

பேச்சின் ஊடாக,
பாறை ஓவியங்கள் என்ன, கல்வெட்டுகள் என்ன, சிற்பங்கள் என்ன


தொண்டை மண்டலம் குறித்துவியந்து விதந்துப் பேசுகிறோம்.


ஆனால், தமிழக வரலாற்றில் தொண்டை மண்டலம் – வட தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது குறித்த எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

இது உண்மை, நியாயம் என்பதை ஐயா சந்திரமூர்த்தி அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

வரலாற்றில் தொண்டை மண்டலம் வடதமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட, பேசப்பட வேண்டும்.

இதைத்தான் இன்றைய உரையாடல் கூர் தீட்டி இருக்கிறது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக