1990 களின் தொடக்கம். தினப்புரட்சி நாளேட்டிற்கு, நான் விழுப்புரம் மாவட்ட நிருபர்.
ஆனால், மதிப்பிற்குரிய இந்தத் தலைவரை நான் நேரடியாக அப்போது சந்தித்தது கிடையாது.
பிறகு, பல்வேறு பத்திரிகைகளில் நமதுப் பயணம் தொடர்ந்தது.ஏராளமான பத்திரிகையாளர் சந்திப்புகளில் சந்தித்து இருக்கிறேன்.
90களின் இறுதியில் விழுப்புரம் மாவட்ட சன் டிவி நிருபராக இருந்தபோது, மதிப்பிற்குரிய தலைவருக்கு மிக அருகிலேயே, மைக் பிடிக்க வேண்டும் அல்லவா, அமர்ந்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிட்டியது.
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முன்பு, திண்டிவனத்திலும், பிறகு தைலாபுரத்திலும், புத்தாண்டு வாழ்த்துகளுடன் சந்திப்போம்.
திண்டிவனம் இல்லம் முன்பு, இவரது பேட்டிக்காக அதிகாலை நேரத்திலேயே தவம் கிடந்த நாள்களும் உண்டு.
அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் நீதிக் கேட்டு, இந்த அரசியல் ஆளுமை, சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்த போது, பதட்டம் மிகுந்த அந்தத் தருணத்தில், கவலையுடன் அந்தப் பந்தலில் இருந்த பத்திரிகையாளர்களின் இந்த, விழுப்புரம் செங்குட்டுவனும் ஒருவன்.
அப்புறம், தைலாபுரம் தோட்ட இல்லத்தில்… வாரந்தோறும் சந்திப்பு. மறக்க இயலா தருணங்கள் அவை. நிறைய எழுதலாம்!
எத்தனை விதமானக் கேள்விகள். யோசிப்பதில்லை. பூசி மெழுகும் போக்கும் கிடையாது. ஆடம்பர, அலங்கார வார்த்தைகள் இல்லை.
எதார்த்தமான பதில்.
இந்த எதார்த்தம் அண்மைய அரசியலுக்கு சரிப்பட்டு வருமா? பல நேரங்களில் நான் யோசித்தது உண்டு.
11.1.2008. பொங்கல் நேரம். தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களுக்கு டைரி வழங்கினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் டைரி அது.
மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட நான், ‘'ஐயா இதில் எழுதிக் கொடுங்கள்' டைரியை அவரிடம் நீட்டினேன்.
அதில் அவர் எழுதிய வாசகம்:
“தாய் வளர்த்து
நாம் வளர்ந்தோம்
தமிழ் வளர்த்து
நாம் வாழ்வோம்”
நன்றிகளும், வாழ்த்துகளும் ஐயா…
அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்.
மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக