விழுப்புரம் ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்தக் கோரி நடந்த
தர்ணா போராட்டத்தைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இப்போதல்ல, 27 ஆண்டுகளுக்கு முன்பு!
ஆம். விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடில் உள்ள ரயில்வே மேம்பாலமானது
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முதன் முறையாக 1960இல் இதன் சீரமைப்புப்
பணிகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து 1990இல் இரண்டாவது முறையாகச் சீரமைப்புப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.
அந்தாண்டு மே மாதவாக்கில் தொடங்கியப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன.
மேலும், மாற்றுப் பாதைக்கான (பவர் அவுஸ் ரோடு-மருதூர்) திட்டமும்
செயல்படுத்தப்படவில்லை.
அப்போது விழுப்புரத்தில் இயங்கிவந்த பல்வேறு அமைப்பினரைக் கொண்ட
நகரநலக் கூட்டு நடவடிக்கைக் குழுவானது, இதற்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை
நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக 4.9.1990இல் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு
நடந்த தர்ணா போராட்டத்தைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு, நெம்புகோல் அமைப்பைச்
சேர்ந்த எனக்குக் கிடைத்தது.
அந்நேரத்தில் விழுப்புரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.பொன்முடி.
அமைச்சர். “மாற்றுப் பாதைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” அவரை நோக்கித்தான் கோரிக்கை வைத்தோம். உடனடியாக
அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு மருதூர் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன
என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இப்போதும் அதே மாற்றுப் பாதையைத்தான் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி
இருக்கிறார் திரு.க.பொன்முடி எம்.எல்.ஏ. அவர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக