வியாழன், 15 பிப்ரவரி, 2018

விழுப்புரத்தில் மயானக்கொள்ளை











விழுப்புரத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று,
இந்த மயானக் கொள்ளைத் திருவிழா...

அடடா..! ஊரே ஒன்று திரள்கிறது.

பிற்பகல் மூன்று மணியிருக்கும் அதோ, எம்.ஜி.ரோடில் இருந்து ஸ்ரீ ரேணுகா
அங்காள பரமேஸ்வரி புறப்பட்டுவிட்டாள். ஆஹா என்ன ஆக்ரோஷம்... என்னவொரு வேகம்?

உடன், ஆர்ப்பரித்து வரும் மக்கள் வெள்ளம்.

முன்னதாக அலகுக் குத்தியும், வேல் தரித்தும், கட்டைக் கால்களிலும் பல்வேறு வேடமிட்டு, பக்தி பரவசத்துடன் ஆடிவரும் பக்தர்கள்.

சாமியை வரவேற்கத்தான், கன்னியாகுளம் சாலையின் இருமருங்கிலும் திரண்டிருக்கும்  பொதுமக்கள். இதில், திடீர் திடீரென்று மருள்வந்து ஆடும் பெண்கள்.

சாமி, இடுகாட்டை நெருங்கியதும்,  பூக்கள், காசுகள், காய்கறிகள் என தங்கள் நேர்த்திக் கடனை அங்காளம்மன் மீது வாரியிறைக்கும் பக்தர்கள். நிச்சயம் தங்கள் வேண்டுதலை இவள் நிறைவேற்றுவாள் என்பதில் இம்மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!

இடுகாட்டின் உள்ளே, தங்களால் இயன்ற வகையில், மூத்தோர்  வழிபாடு சிறப்பாகவே நடந்தது.

ஆம். சங்க காலத்தில் தொடங்கிய அந்த நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியை, இன்றும் விழுப்புரம் இடுகாட்டில் காண்கிறோம்.

விழுப்புரத்தில் இன்று (15.02.2018) பிற்பகல் நடந்த மயானக் கொள்ளைத் திருவிழாவின் புகைப்படங்கள்...

உங்களுக்காக... உங்கள் விழுப்புரத்தார் (கோ.செங்குட்டுவன்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக