ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் மணி
விளைச்சல் அமோகம். இதற்காக, இந்த மாவட்டத்துக்கு, ‘மல்லாக்கொட்ட ஜில்லா’ என்றப் பெயரும் உண்டு.
இதற்காக அமைக்கப்பட்ட தென்னார்க்காடு மாவட்ட
நிலக்கடலை சந்தைக் குழுவில் (South Arcot Groundnut Market Committee) பணியாற்றிய சிலர், பின்னாளில் அரசியல்
ஜாம்பவான்களானத் திகழ்ந்தனர். அவர்கள்தாம், ஏ.ஜி. என்றழைக்கப்பட்ட திரு.ஏ. கோவிந்தசாமி,
திரு.வே.ஆனைமுத்து, திரு.விழுப்புரம் எம்.சண்முகனார்.
ஏ.கோவிந்தசாமி

பின்னர் 1952இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
போட்டியிட்டு (தற்போதைய விழுப்புரம் மாவட்டம்) விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற
உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 1957இல் வளவனூர் தொகுதியிலும்,
பின்னர் 1967இல் முகையூர் தொகுதியிலும் வெற்றி பெற்றார். 1967இல் அறிஞர் அண்ணா
தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இவர் பதவியில் இருந்த 1967-69 ஆகிய
காலக்கட்டங்களில் வேளாண்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதில்,
வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மிகுபயன் தரும் தானிய ரக திட்டம், ஒரு போக
நிலங்களை இருபோக நிலங்களாக்கும் திட்டம், சிறுபாசன வசதிகளைப் பெருக்கும் திட்டம்
போன்றவற்றை குறிப்பிடலாம்.
இவரது அமைச்சர் பதவிக்காலத்தின் போதுதான் ஐஆர்
8, ஆடுதுறை 27 ஆகிய நெல் இரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும், பயிர்களை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல
விமானம் மூலம் மருந்துத் தெளிக்கும் திட்டம் தென்னார்க்காடு, செங்கற்பட்டு, கோவை,
நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது என்பதையும் இங்குக்
குறிப்பிடலாம்,
வே.ஆனைமுத்து

தந்தை பெரியாருடனான அரசியல் பணியில் தன்னைத் தீவிரமாக
இணைத்துக் கொண்ட ஐயா வே.ஆனைமுத்து, தற்போது மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக்
கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
விழுப்புரம் எம்.சண்முகனார்

விழுப்புரம் நகரமன்றத்தில் 56 ஆண்டுகாலம் தொடர்ந்து
உறுப்பினராக இருந்து சாதனைப் படைத்தவர்.
1947, 1952, 1969, 1986 ஆகிய
காலக்கட்டங்களில் விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்திருக்கிறார்.
மேலும், 1962,
1967, 1971 காலக்கட்டங்களில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் எம்.சண்முகனார்
வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக