மீனகாலை நான்கு மணி. விழுப்புரம் எம்.ஜி.ரோடு. நிற்பதற்கு இடமில்லை. அவ்வளவு கூட்டம்!
பரபரக்கிறது மீன் வியாபாரம்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து வாங்கிப் போகிறார்கள்.
வெளியில் வாங்குவதை விட இங்கு வாங்கினால், குறைந்தபட்சம் ஐம்பது அறுபது ரூபாய் கம்மி.
கன்னியாகுமரியில் இருந்து மட்டுமல்ல ஆந்திரா, கேரளாவில் இருந்தும் மீன்கள் விழுப்புரம் கொண்டு வரப்படுகின்றன.
'இங்கிருந்து செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான ஊர்களுக்கு மீன்கள் போவதாக'ச் சொல்லும் நண்பர் குமரன் Kumaran Villupuram Kakuppam,
'மரக்காணம், கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கும் போவதாகவும்' சொல்கிறார்.
வியப்பாகத்தான் இருக்கிறது!
விழுப்புரம் மிகப்பெரிய மீன் சந்தையாகவும் மாறியுள்ளது.
மகிழ்ச்சி!
அதிகாலை மீன் விற்பவர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது!
இவர்களால், கடைத் தெருவைச் சேர்ந்த மற்ற வணிகர்களுக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
விழுப்புரம் மிகப்பெரிய வணிகத் தளம். மீன் விற்பனையிலும்.
இதைத் தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் தான் முயற்சி எடுக்க வேண்டும்..!
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக