உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களுடன் ஒரு
சந்திப்பு...
நேற்று (சனி) மாலை, சென்னை பல்லாவரத்தில் உள்ள ஐயாவின் அலுவலகத்தில்,
விழுப்புரம் தோழர் கோ.பாபு அவர்களுடன் இந்தச் சந்திப்பு நடந்தது.
என்னுடைய ‘பழைய பேப்பர்’ புத்தகத்தினைப் புரட்டிய ஐயா அவர்கள், காலஞ்
சென்ற மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரை
நினைவுகூர்ந்தார்.
குறிப்பாக, ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’ பற்றி விரிவாகவே பேசினார். மகாத்மா காந்தி
வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வாரா? மாட்டாரா? என உலகமே எதிர்பார்த்திருந்த
நேரத்தில், அதனை மோப்பம் பிடித்துச் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு நிருபரின்
சாதுரியத்தையும் பாராட்டினார். கூடவே, தற்காலப் பத்திரிகையுலகின் நிலவரத்தையும்
கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் குறித்தும் பேசினோம். ‘அவர் காலத்தில்
தொல்காப்பியம் பதிப்புக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால், திராவிட மொழிக்
குடும்பம் என்பதைவிடுத்து, தமிழிய மொழிக்குடும்பம் எனக் கால்டுவெல் பெயர் சூட்டியிருப்பார்’ என்பது ஐயா அவர்களின் கருத்தாக இருந்தது.
திராவிட எனும் சொல்லாக்கம் தமிழக அரசியலில் எப்படியெல்லாம்
பயன்படுத்தப் பட்டது என்பதை விளக்கிய அவர், அண்மைக்கால அரசியல் குறித்தும்
பேசினார்.
ஐயாவின் அனுபவங்கள்.... ஆவணப்படுத்தப்பட வேண்டியது இன்னமும் நிறைய
இருக்கிறது.
இந்தச் சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. என்ன, திடீர்னு ஐயாவை?
நீங்கள் கேட்கலாம்...
என்னுடைய அடுத்தப் படைப்பு, ‘திணிக்கப்பட்டதா திராவிடம்?’ தயாராகிவிட்டது. இதற்கான அணிந்துரைக்காகத்தான்
ஐயா அவர்களை அணுகியிருந்தோம்.
இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த ஐயா
பழ.நெடுமாறன் அவர்கள், விரைவில் அணிந்துரை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.
காத்திருப்போம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக