சாலை விபத்துகளில் கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்கள்,
குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள்...
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில்
அதிகரித்துத்தான் இருக்கின்றன.
இவை, தொலைக்காட்சிகளில் சிலநிமிடச் செய்திகளாகவும், பத்திரிகைகளில்
சிலமணி நேர செய்திகளாகவும் நம்முன் வந்து மறைந்துவிடுவதுதான் வேதனைக்குரியது!
இந்நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய சமூக அவலம் மறைந்திருக்கிறது.
இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசும், சமூகமும் மௌனமாய்க் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
இன்று (வெள்ளி) காலைகூட, நாகப்பட்டிணம் மாவட்டம், பொறையாரில் அரசுப்
போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒருபகுதி இடிந்துவிழுந்து, போக்குவரத்துத்
தொழிலாளர் எட்டுபேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மனசு வலிக்கிறது. இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?
அரசுக்கு வேண்டிய இலக்கணங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
நம்முடைய அற இலக்கியங்கள் வற்புறுத்திச் சென்ற பிறகும், அவற்றை நமது அரசாங்கங்கள்
பார்க்க மறுப்பது ஏன்?
இதோ பாருங்கள்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், பாழடைந்துக்
கிடக்கும் கட்டடங்கள்.
இவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் உரியவர்களுக்கு
இருக்கிறதா? இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக