‘எண்ணாயிரம்
சமணர் கழுவேற்றம்’ – இதுகுறித்து,
பொதுத்தளத்தில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமயவாதிகள் என்ன
நினைக்கின்றனர்? குறிப்பாக, சமண சமயத்தினர்?
1975இல்
‘தமிழகத்தில் ஜைனம்’ நூலினை வெளியிட்ட சமணப் பெரியவர் ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால்
அவர்கள், ‘அகச்சான்றற்ற புராணக் கதை’ எனக் கழுவேற்றக் கதையைப் புறந்தள்ளினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,
திகம்பரச் சமணர்களின் தலைமைப் பீடமாக விளங்கிக் கொண்டிருக்கும், மேல்சித்தாமூர்
ஜினகாஞ்சி மடத்தின் மதிப்பிற்குரியத் தலைவர் அவர்களை, 24.09.2014 அன்று சந்தித்து
உரையாடினேன்.
அப்போது
‘எண்ணாயிரம் சமணர் கழுவேற்றம்’ குறித்து அவர் தெரிவித்தக் கருத்துகளை, அண்மையில் வெளிவந்துள்ள
‘சமணர்
கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்’ நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இந்நூலினை,
மரியாதைக்குரிய மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு
செல்வதற்காக இன்று (14.12.17) காலை நண்பர் கோ.பாபு அவர்களுடன் மேல்சித்தாமூர்
பயணம்.
‘சமணர்
கழுவேற்றம்’ எனும் இந்த
ஒற்றை விசயம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, நூலாகக் கொண்டுவந்துள்ளதை சாமிஜி
அவர்கள் வெகுவாகவே பாராட்டினார். நூலாசிரியனான எனக்குச் சால்வைப் போர்த்தியும்,
நினைவுப் பரிசு வழங்கியும் மகிழ்ந்தார்.
நெகிழ்வானத்
தருணம்.
நீண்ட
உரையாடல், மடத்தில் உணவு உபசரிப்பு... பிற்பகல் விடைபெற்றோம்..!
புகைப்படங்கள்: திரு.கோ.பாபு அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக