நேற்று சென்னை சென்றிருந்த நான், அவ்வை
சண்முகம் சாலையில், அதிமுக அலுவலகத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.
அப்போது, அங்குச் சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த
அந்தப் போஸ்டர் என் கவனத்தைக் கவர்ந்தது.
அது, முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின்
16ஆம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர். ‘சமூக நீதிக்காவலர்’ ‘தமிழ்நாடு உரிமைத் தளபதி’ எனும் அடைமுழக்கங்கள் அதில் இடம்
பெற்றிருந்தன.
எஸ்.டி.எஸ். என்றதுமே காரில் தொங்கிக் கொண்டுச்
சென்ற அந்த இளைஞர்தான் நம் நினைவுக்கு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் அவர்தான் நிரந்தர
வருவாய்த்துறை அமைச்சர். தமிழ்நாட்டில் இருக்கும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக
அலுவலர்கள் யாரும் இவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
விழுப்புரம் பூந்தோட்டத்தில் அமைந்திருக்கும்
கிராம நிர்வாக அலுவலர் சங்கக் கட்டடம்கூட, 1990களின் தொடக்கத்தில் அவரால்தான்
திறந்துவைக்கப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்துக்கான
இடத்தேர்வின்போது, கப்பியாம்புலியரில் இருக்கும் விஜிபிக்குச் சொந்தமான இடத்தை ஒரு
அதிகாலை நேரத்தில் ‘வாக்கிங்’ என்று சொல்லி எஸ்.டி.எஸ்.
பார்வையிட்டது, அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தனிக்கட்சியையும் கண்டவர். ஒருமுறை அவர் சென்ற
கார் திண்டிவனத்தில் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இப்படி பல நினைவுகள், அந்த முன்னாள் அமைச்சர்
குறித்து என் முன் நிழலாடியது.
பரவாயில்லை, மறைந்து 16 ஆண்டுகள்
ஆகியிருந்தாலும், நினைவில் வைத்து அவருக்கு, போஸ்டர் அஞ்சலி
செலுத்தியிருக்கிறார்கள். பாராட்டிற்குரியதுதான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக