நாமம் எனப்படும் திருமண்.
வைணவச் சடங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது.
உடலில் எங்கெங்குத் திருமண் காப்பு இடலாம் (ஏறக்குறைய 12 இடங்களில்) என்றெல்லாம் வரையறுக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஆனால், திருக்கோயில்களில் எந்தெந்த இடங்களில் திருமண் வரையலாம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை போலும்.
இதோ பாருங்கள்…
நீர் வண்ணப் பெருமாள் திருக்கோயில்.
சென்னை, பல்லாவரம் அருகே திருநீர்மலையில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள இக்கோயில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது.
கோயில் வளாகத்திற்குள் நாம் சுற்றி வரும்போது நம் கண்களில் படும் முக்கிய காட்சி, ஆங்காங்கே, பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் பளீரென்று பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள திருமண் – நாமங்கள்!
வைணவத்தின் அடையாளங்களுள் முக்கியமானது, வைணவத் திருக்கோயிலில் இருக்க வேண்டியதுதான். தவறில்லை.
ஆனால், பல இடங்களில், கல்வெட்டுகளின் மீது வரையப்பட்டுள்ளது தான் வேதனை!
இக்கல்வெட்டுகள் வரலாற்றை நினைவுகூரும் ஆவணங்கள்.
அதில் போய்,
பட்டை பட்டையாய் வண்ணந் தீட்டுவது, எழுதுவது …
இதெல்லாம் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை..?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக