உண்மையில் இதை, இந்து சமய அறநிலையத்துறை செய்ய வேண்டும்…
அவர்கள்தானே வெள்ளை அடிப்பது, கல்வெட்டுகளை மறைப்பது போன்ற திருப்பணிகளை(!) செய்து வருகிறார்கள்.
அல்லது எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்து வரும் தொல்லியல் துறை செய்ய வேண்டும்.
ஆனால், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்கள் செய்கிறார்கள்.
விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது அபிராமேசுவரர் திருக்கோயில். சோழர் காலத்தியது. தேவார மூவரால் பாடப்பெற்றது.
இக்கோயிலில் வரலாறு சொல்லும் கல்வெட்டுகள் ஏராளம். ஏராளம். இவை அனைத்தும் திருப்பணி எனும் பெயரில், வண்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என எழுதப்பட்டு, மக்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
இவற்றை மீட்கும் முயற்சியில், விழுப்புரத்தைச் சேர்ந்த நண்பர் அகிலன் தலைமையிலான 'கரிகால சோழன் பசுமை மீட்புப் படை'யினர் மற்றும் நண்பர் நாராயணன் தலைமையிலான ‘யாதும்ஊரே யாவரும் கேளிர்' அமைப்பினர் இன்று காலை இறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு கல்வெட்டு ஆய்வாளர் நண்பர் இரமேஷ் ஊக்க சக்தியாக இருக்கிறார்.
இடையில் நாமும் 'பிரஷ்' பிடித்ததில் மனநிறைவு!
திருக்கோயிலில் நல்ல திருப்பணி. நண்பர்களை வாழ்த்துவோம்..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக