கடந்த சில நாள்களுக்கு முன்பு பேராசிரியர் பழமலையை சந்திக்கச் சென்றிருந்தேன்.
பேசிவிட்டுக் கிளம்பும் தறுவாயில், ஜுன் 16-30 உண்மை (தி.க.வின் மாதமிருமுறை வெளியீடு) இதழை என்னிடம் கொடுத்தார்.
“இதில் விந்தன் கதை வந்திருக்குப் படி” என்றவர், “இதை எப்படி இதில் (உண்மை) போட்டாங்கன்னு தெரியல” என்றும் சொன்னார்.
(ஜுன் 30 - விந்தனின் நினைவு நாளையொட்டி, அவரதுக் கதை பிரசுரம் ஆகியிருக்கிறது.)
“உண்மை” இதழை வாங்கி வந்தக் கையோடு, அதில் இடம்பெற்றிருந்த, விந்தனின் “திருந்திய திருமணம்” கதையைப் படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருக்கிறேன்.
சிரித்தேன். சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
மகனின் தமிழ்ப் பற்று, சிகாமணி எனும் பெயரை முடிமணியாக்கி இருக்கிறது, எனத் தொடங்கும் நக்கல், நையாண்டிகள் கதை முழுவதும் தொடர்கின்றன.
ஒரு இடத்தில் தன் தாயிடம் பேசத் தொடங்கும் முடிமணி, “தாயே தலைவணங்குகிறேன்” என்று சொல்ல, அதற்கு அவன் தாய், “என்னடா இது நாடகத்திலே வேஷம் போடும் கூத்தாடிப் பயல்கள் மாதிரி? பிள்ளையா, லட்சணமா பேசேன்” என்று எரிந்து விழுகிறாள்.
முடிமணி தன் 'திருந்திய திருமணம்' (சீர்திருத்த திருமணம்) குறித்துத் தந்தையிடமும் ஆசிரியர் அறிவழகனாரிடமும் தொடர்ந்து விவாதிக்கிறான்.
இதன் விளைவாக அவனுள் பல சிந்தனைகள். இடையிடையே “சிக்கலான கேள்வி: சிந்திக்க வேண்டிய கேள்வி”கள் தலைகாட்டுகின்றன.
இதனால் முடிமணி, சிந்திக்கிறான். சிந்திக்கிறான். சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். முடிமணியின் தந்தை கூட, கொட்டாவி விடுகிறார். விடுகிறார். விட்டுக் கொண்டே இருக்கிறார். (இவற்றில் இருந்து தான் கலைஞரின் 'ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' எனும் வசனம் உருவானதாகவும் சொல்வார்கள்.)
திருந்திய திருமணம் தொடர்பாக முடிமணிக்குள் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, காதலித்தப் பெண்ணை ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.
“திருந்திய திருமணம் வீழ்க; திருட்டுத் திருமணம் வாழ்க” அறிவழகனார் அறையலுற்றார்.
கதை முழுவதும் அன்றைய கழகத்தவரின் சீர்திருத்தத் திருமணம், அடுக்குமொழிப் பேச்சு, இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுத் திருமணம் குறித்து நக்கல், நையாண்டிகள் நிரம்பியுள்ளன.
“திருந்திய திருமணம்” படித்து முடித்தவுடன் எனக்குள்ளும் எழுந்தது சந்தேகம். “எப்படி இதை 'உண்மை'யில் போட்டாங்க?”
சிந்திக்கிறேன். சிந்திக்கிறேன். சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக