விழுப்புரம் பொதுப்பணித்துறையில் அப்போதைய செயற்பொறியாளராக இருந்த, தமிழறிஞர் கொடுமுடி ச.சண்முகன், விழுப்புரம் இலக்கியக் கழகங்கள் மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம் ஏற்பாட்டின் பேரில் “தேசிய நீர்வள நாள் கவியரங்கம்” 01.06.1991 அன்று நடந்தது.
தலைமை தாங்கிய பேராசிரியர் த.பழபலய் "நீயும் எழுது” என பணித்தார். கவிதை எனும் பெயரில் ஏதோ எழுதினேன்.
தமிழாய்ந்த வெண்ணெய் வேலனார், சிவலிங்கம், கு.சம்பந்தம், ஆகிய அறிஞர் பெருமக்களுடன் நானும்...
பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அவர்களின் துறை ஏற்பாடு ஆயிற்றே!
“என் கவிதையில் கொஞ்சம் வறட்சி தென்படும். ஏனென்றால் நல்ல தண்ணீர் குடித்து நாள்கள் பலவாகின்றன. எனவே பொருத்தருள வேண்டுகிறேன்” - என்று தொடங்கி,
“நம் நாடு செழிக்க நீர்வளம் கொழிக்க வீட்டுக்கு ஒரு யூக்ளிபட்ஸ் மரம் வளர்ப்போம். காட்டுக்கு ஒரு வீரப்பனை வளர்ப்போம்” - என முடித்தேன்!
அரசாங்கத்தின் சார்பில் ஆன நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசை, அரசின் திட்டங்களை, அரசியல்வாதிகளை நக்கல் நையாண்டி செய்து “கவிதை” படித்தேன்.
நல்ல வரவேற்பு... கைதட்டல்கள்!
ஆனாலும், இதுவே எனது முதலும் முடிவும் ஆன கவிதை (?). அதன் பிறகு இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் நான் எப்போதும் இறங்கவில்லை!
(இறங்கி இருந்தால், வருடத்திற்கு இரண்டு கவிதை (?) புத்தகங்கள் வெளிவந்து உங்களைத் தொந்தரவு செய்திருக்கும். நல்ல வேளை நீங்களும் தப்பித்தீர்கள்!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக