விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள, தச்சூரில்
கண்டெடுக்கப்பட்ட, பல்லவர் காலச் சிற்பங்கள் குறித்து, கடந்த மாதம் 13ஆம் தேதி
என்னுடையப் பதிவினை நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.
அப்படி கண்டெடுக்கப்பட்டச் சிற்பங்களில் ஒன்றுதான், இணைப்பில் உள்ள
முருகன் சிற்பம்.
இப்போது இவர் இருப்பதோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு
கிடங்கில்.
பிரபல சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் கடத்தப்பட்டுக் கடல்
கடந்துச் சென்றிருக்கிறார்.
இதற்கு உடந்தையாக இருந்தது யார்? இதற்காக எத்தனைக் கோடிகள் கை மாறின?
எனும் விவரங்கள் எல்லாம் தெரியவில்லை.
இந்தச் சிலையை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவர ‘பொயட்ரி ஸ்டோன்’ விஜயகுமார் போன்ற நண்பர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்
முடியவில்லை!
காரணம்? அமெரிக்க போலீஸ் கேட்பதெல்லாம், ‘இது உங்கள் நாட்டில் காணாமல்
போனதுதான் என்பதற்கான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையைக் கொடுங்கள்’ என்பதுதான்.
இங்குதான், முதல் தகவல் அறிக்கையும் இல்லை: ஒரு மண்ணாங்கட்டியும்
இல்லையே?
யாராவதுப் புகார் கொடுத்திருந்தால்தானே, போலிசும் வழக்குப் பதிவு
செய்யும்?
சிலை காணாமல் போனது குறித்து இதுவரை எந்தப் புகாரும் இல்லை.
தெரிந்து கொள்ளுங்கள், நமது வரலாற்றுச் சின்னங்கள், கலைப்பொருட்கள்,
நம் கண்முன்னே எந்தளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதை..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக