நன்றி...
டாக்டர் டி.தியாகராஜன் அவர்கள் குறித்தானப் பதிவில், நண்பர்கள்,
மூத்தவர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியளிக்கிறது.
டாக்டர் அவர்கள் இம்மண்ணைவிட்டு மறைந்துச் சரியாக 40 வருடங்கள்
ஆகிறது. ஆனாலும் இன்றும் அவர் நினைவுகூரப்படுகிறார். காரணம், அவரதுப் பணிகள்தாம்.
அந்த வகையில், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நல்லுங்கள்
அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது எனதுக் கடமையாகும்.
2009இல் விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் நூலுக்கானத் தேடலின் போது,
டாக்டர் தியாகராஜன் குறித்த விவரங்களை அறிந்தேன். விழுப்புரம் நகரமன்றக் கூடத்தில்
அவரதுப் படம் இருக்கிறது. ஆனாலும் தெளிவாக இல்லை. வேறு படம் கிடைக்குமா? என
யோசித்த வேளையில், நகரத்தின் மூத்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். நளினி அவர்களைச் சந்தித்தேன்.
“டாக்டர் தியாகராஜன் படம் இருக்குமா?“ என அவரிடம் கேட்டதுதான்
தாமதம், வீட்டிற்குள் பூஜையறைக்குள் சென்ற அவர், டாக்டரின் பெரிய படத்தை எடுத்து வந்தார்.
படத்தில், குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.
பூஜிக்கத் தகுந்த இடத்தில்தான் அவர்கள் டாக்டரை வைத்திருந்தனர்.
டாக்டர்.திருமதி. நளினி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றிகள்.
மேலும், வழக்கறிஞர் ஐ.நிஷார், அவரது வீட்டில் இருந்து அரியப் படம்
ஒன்றை எடுத்து வந்தார். டாக்டர் தியாகராஜன் அவர்கள் தனது மனைவி மகள்களுடன்
இருந்தப் படம் அது.
இந்தப் படத்தையும் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். இந்நேரத்தில்
வழக்கறிஞர் நிசார் அவர்களுக்கும் நன்றிகள்.
தி.க.வின் மூத்ததொண்டர் சாம்பசிவம், தலைமையாசிரியர் (ஓய்வு)
இர.இராமமூர்த்தி ஆகியோர், டாக்டர் தொடர்பான நினைவுகளை என்னுடன் பகிர்ந்து
கொண்டனர். அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகள்.
இப்படியாக, ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும் இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் டாக்டர் டி.தியாகராஜன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக