சனி, 1 ஜூலை, 2017

ஜனாப் முகமது உஸ்மான் சாயபு பகதூர்

விழுப்புரம் பிரமுகர்கள் -1


ஜனாப் முகமது உஸ்மான் சாயபு பகதூர்

அன்றைய விழுப்புரத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவர்.

என்.சுப்புராயப் பிள்ளை தலைமையில் 1922இல் முதல் விழுப்புரம் நகரமன்றம் அமைந்தபோது அதில் உறுப்பினராக இருந்தவர் ஜனாப் முகமது உஸ்மான் சாயபு பகதூர் அவர்களாவார்.

தொடர்ந்து, 1924, 1927, 1931, 1934, 1941, 1947 ஆகிய காலக்கட்டங்களில் விழுப்புரம் நகரமன்றத்துக்குத் தொடர்ந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதில் 1941-1947 காலத்தில் நகரமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

ஜனாப் முகமது உஸ்மான் சாயபு பகதூர் அவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்தவராகவும் விளங்கியவர்.

இதற்கு உதாரணமாகத் திகழ்வது, இரவீந்திரநாத் தாகூர் மறைவின் போது அவர் கொண்டு வந்த கீழ்க்காணும் தீர்மானமேயாகும்:

“கவிவானராக, கதை வரைவோராக, சொற்பொழிவானராக, ஓவியம் தீட்டுவோராக, கடிதம் எழுதுவோராக, சிறுகதை சொல்வோராக, ஆட்சியாளராக, புதுவகையில் கலைக்கழகம் அமைப்போராக, பிறவியிலேயே ஒவ்வொன்றிலும் ஒத்த, பேராற்றல் வாய்ந்தவராக, வியத்தகு வகையில் பலகலை வல்ல இந்தியராக, உலகம் புகழும் உயர்ந்தவராக திகழ்வீற்றிருந்த டாக்டர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களது மறைவுக்கு இம்மன்றம் பெரிதும் வருந்தி துயர் ஆழ்கிறது. நம்நாட்டு நந்தாமணி விளக்காய பேரரறிஞரை இழந்தோமே என கையற்று நிற்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு இம்மன்றத்தின் பணிவார்ந்த ஆறுதல் மொழிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உண்மைதான். ஜனாப் முகமது உஸ்மான் சாயபு பகதூர் அவர்கள் பேராற்றல் வாய்ந்தவர் என்பதை மேற்காணும் தீர்மானம் நமக்குத் தெரிவிக்கிறது!

(குறிப்பு: அன்னார் குறித்து மேலதிகத் தகவல் தெரிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம். என்னுடனும் தொடர்பு கொள்ளலாம். அலைப்பேசி: 99 44 622 046.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக