ஞாயிறு, 2 ஜூலை, 2017

வழக்கறிஞர் குப்புசாமி ஐயங்கார் என்கிற சேஷாத்ரி ஐயங்கார்

விழுப்புரம் பிரமுகர்கள் – 2


வழக்கறிஞர் குப்புசாமி ஐயங்கார் என்கிற சேஷாத்ரி ஐயங்கார்

வீறுகொண்ட நடை, வீரங்கொள்ளும் பேச்சு. இந்த மூத்த வழக்கறிஞருக்கு, தேசபக்த தொண்டருக்கு விழுப்புரம் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் “சிங்கம்என்றே பெயர்.


கம்ப ராமாயணத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட குப்புசாமி ஐயங்கார், 1925 முதல் தேச விடுதலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1941இல் மகாத்மா காந்தியின் பிரத்யேக அனுமதி பெற்று தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கடலூர் மற்றும் திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டார்.

பல இன்னல்களுக்கிடையில் விழுப்புரம் சுற்றுவட்டப் பகுதிகளில் தேச விடுதலைக்கானப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஒருமுறை ஜெயப்பிரகாஷ் நாராயணன் விழுப்புரம் வருகை தந்தார். நவாப்தோப்பில் பிராமாண்ட பொதுக்கூட்டம். இக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றியவர் குப்புசாமி ஐயங்கார் அவர்களாவார்.

காங்கிரசை கலைத்துவிடுங்கள் என்று காந்தி சொன்னபோது, சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் இவர்.

தனது திருச்சி சிறை அனுபவத்தைப் பற்றி சிறிய பிரசுரத்தையும் வழக்கறிஞர் குப்புசாமி ஐயங்கார் வெளியிட்டிருக்கிறார்.

அதில், பரமார்த்திக சத்தியாகிரகளுக்கும், ஒப்பந்த சத்தியாகிரகளுக்குமான வித்தியாசத்தை விளக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு சுதந்திரமடைந்த பின்பு தியாகிகள் பலரும் மானியமாக நிலங்களை பெற முற்பட்டபோது, அதனைப் பெற குப்புசாமி ஐயங்கார் மறுத்துவிட்டார்.

“தான் தியாகம் செய்தபோது பிரதிபலனை எதிர்பார்க்கவில்லைஎன்று தெரிவித்த அவர், “என்னுடைய தியாகத்துக்கு ஒரு சில ஏக்கர் நிலங்கள் ஈடாகாதுஎன்றும் முழங்கியிருக்கிறார்.

01.10.1897இல் பிறந்த குப்புசாமி ஐயங்கார் என்கிற சேஷாத்ரி ஐயங்கார், 01.12.1997இல் விழுப்புரத்தில் மறைந்தார்.

அன்னாரது மகனார் கு.வரததேசிகன் விழுப்புரத்தின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவராவார்.


-கோ.செங்குட்டுவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக