விழுப்புரத்தின் சினிமா பிரியர்கள் உண்மையில் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள்.
இருக்காதா பின்னே? ஏறக்குறைய ஒரு வாரத்துக்கும் மேல் முருகா
தியேட்டர் மூடியே இருக்கிறதே!
தியேட்டரை நடத்தி வந்தவர் இதுநாள் வரை குத்தகைக்கு (லீஸ்) நடத்தி
வந்திருக்கிறார். தற்போது அந்தக் குத்தகை காலம் முடிந்துவிட்டிருக்கிறது. இதனால்,
கட்டடத்தின் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.
அவர்கள் தொடர்ந்து தியேட்டரை நடத்துவார்களா? என்று தெரியவில்லை
என்கிறார்கள் இங்குள்ள ஊழியர்கள்.
முன்பு விஜயா பின்னர் பாபு, இறுதியாக முருகா எனப் பெயர் மாற்றம்
பெற்ற இத்தியேட்டருக்குப் பின் ஒரு வரலாறே
இருக்கிறது.
எம்ஜிஆரின் ரிக் ஷாக்காரன், டி.ராஜேந்தரின் என் தங்கைக் கல்யாணி,
தங்கைக்கோர் கீதம் போன்ற படங்கள் இங்குச் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. அண்மையில்
திரையிடப்பட்ட பாகுபலியையும் சொல்லலாம்.
கடந்தப் பத்தாண்டுகளுக்கு முன்பு, விழுப்புரத்தில் சவீதா, கண்ணன்,
சாந்தி, சீதாராம் என தியேட்டர்களாக இருந்தன.
இப்போது இருப்பது கல்யாண் (டிடிஎஸ்)
தியேட்டர் மட்டுமே இருக்கிறது.
அட என்னடா இது, விழுப்புரத்துக்கு வந்திருக்கும் சினிமா சோதனை..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக