கடந்த வாரத்தில் விடுமுறைக்கு விழுப்புரம் வந்த என் மகளுக்குத் தொடர் காய்ச்சல்!
மருத்துவரிடம் காண்பித்தும் குறையவில்லை.
சரி பார்த்துவிடலாம். நண்பர் குமரன் இரத்தப் பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவு வந்தது.
“எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றார். எனக்கோ தலைச்சுற்றியது.
உடனடியாக, சென்னையில் இருக்கும் சித்தர் திருத்தணிகாசலம் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
“பதட்டப்படாதீர்கள் ஐயா. இது டெங்குதான்” என்று சொன்னவர், “உடனடியாக என்னிடம் யாரையாவது அனுப்புங்கள். மருந்து தருகிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பாதிக்கப்பட்டவருக்குத் தர வேண்டும்” என விரைவு படுத்தினார்.
அடுத்த சில மணி நேரங்களில் சித்தர் கொடுத்தனுப்பிய மூலிகை மருந்து விழுப்புரம் வந்தது.
அன்றிரவே சிகிச்சையும் தொடங்கியது.
இதோ, ஐந்தாம் நாள், பூரண குணம் பெற்றுவிட்டார், என் மகள்.
எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
உரிய நேரத்தில், உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, என் மகளை குணப்படுத்திய ஐயா சித்தர் அவர்களுக்கு நன்றிகள்…
(இன்று, சேந்தமங்கலம் வந்த சித்தர் அவர்களை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக